முசலி மக்களின் ஏக்கம்..!
இன்று நாட்டின் சகல பிரதேசங்களிலும் இணையத்தளப் பாவனை பரவலாகக் காணப்படுகின்றது. இணையத்தளத்தின் வருகை உலகை ஒரு கிராமமாக மாற்றியுள்ளது. தகவல் தொடர்பாடல் விருத்தி பயன்பாட்டில் இணையம் முக்கிய பங்கை ஆற்றுகின்றது.
துரித சேவை. செலவு குறைவு. நம்பகத்தன்மை. நேரம் மிகுதி. அதிகமான தகவல் அனுப்பவும் பெறவும்உள்ள வாய்ப்பு. அரச அலுவலகங்கள்தமக்கு இடையிலா தகவல் பரிமற்றம. பிறப்புச்சான்றிதல் பெறல். சுற்று நிருபங்கள் பார்வையிடல். அரச வரத்;தமானி பார்வையிடல். அமைச்சுகள்,திணைக்களங்களின் விபரங்களை விரைவில் அறியும் வாய்ப்பு.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இந்த வசதி மன்னார் மாவட்டத்தின் மீள்குடியேற்றப்பகுதியான முசலிப் பிரதேசத்திற்கு கிடைக்காமல் உள்ளது. இப் பிரதேசத்தைச் சேர்ந்த தனி நபர்களும் அரச நிறுவனங்களிலும் கணணிகளும்,டொங்கிள்களும் இருந்தும் உரிய வலையமைப்புக்களின் சமிக்ஞை (சிக்னல்) சரியாக்கிடைக்காமல் உள்ளதால் இப் பகுதி மக்களும் அலுவலக ஊழியர்களும் பாரிய அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர். ஆகவே இதனை நிவர்த்தி செய்ய மொபிடல், எடிசலாட், எயார்ட்டல், ஹச், டயலொக் போன்ற தனியார் வலயமைப்பினரும் அரச டெலிகொம் அமைப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும ;என கோரிக்கைவிடப்படுகிறது.
Post a Comment