ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்ற மாணவி சுட்டுக்கொலை
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ளது. எனவே துப்பாக்கி வைத்திருப்பதற்கான சட்டத்தை கடுமையாக்கவேண்டும் என அதிபர் ஒபாமா உள்பட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. அதுவும் அதிபர் ஒபாமாவின் சொந்த ஊரான சிகாகோ நகரத்தில் நிகழ்ந்துள்ளது. சிகாகோவில் ஒபாமாவின் வீடு தெற்கு பகுதியில் உள்ளது. அதில் இருந்து 2 கி.மீட்டர் தூரத்தில் ஒரு பூங்கா உள்ளது. அங்கு ஹாடியா பென்ட்லீடன் என்ற 15 வயது மாணவி பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது பூங்காவில் அமர்ந்து தனது தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம மனிதன் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். உடனே ஹாடியா உள்ளிட்டோர் தப்பி ஓடினர். இருந்தும் முதுகில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஹாடியா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து, சிகாகோ போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். துப்பாக்கி சூட்டில் பலியான ஹாடியா சமீபத்தில் நடந்த ஒபாமா பதவியேற்பு விழாவின் போது கலைநிகழ்ச்சியில் பங்கேற்றார். இவரது மரணத்துக்கு அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிச்செலியும் ஆழ்ந்த இரங்கல் தெரி வித்துள்ளனர்.
மேலும் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளனர். இதற்கிடையே அரி சோனா மாகாணத்தில் உள்ள போனிஸ் நகரில் ஒரு நிறுவனத்துக்குள் புகுந்து ஒரு நபர் சுட்டதில் அதன் அதிகாரி ஸ்டீவ்சிங்கர் (48) என்பவர் உயிரிழந்தார். 2 பேர் காயம் அடைந்தனர்.
அதே நேரத்தில் அட் லாண்யா, ஷார்ஷியா ஆகிய நகரங்களில் பள்ளிகளில் புகுந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டான். அதில் 14 வயது மாணவரும், ஒரு ஆசிரியரும் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இது போன்று நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment