Header Ads



பயங்கரவாதி என்றால் யார்..? பாராளுமன்றத்தில் விளக்கம் வழங்கிய அரசாங்கம்


பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (கருத்துச்) சட்ட மூலத்தில் பயங்கரவாதி மற்றும் பயங்கரவாத செயல் என்பவற்றுக்கான வரைவிலக்கணங்கள் அடங்கிய  திருத்தத்தை அரசு நேற்று வெள்ளிக்கிழமை சபைக்கு சமர்ப்பித்தது. 

பாராளுமன்றத்தில் 08-02-2013 சபை முதல்வரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி கருத்துகளின்  விபரங்கள் பின்வருமாறு ;
பயங்கரவாதி என்பது 

அ. பயங்கரவாதச் செயலொன்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மற்றும் வேண்டுமென்று புரிகின்ற அல்லது புரிவதற்கு எத்தனிக்கின்ற ;

ஆ. பயங்கரவாதச் செயலொன்றை புரிவதில் உடந்தையான ஒருவராகப் பங்குபற்றுகின்ற; 

இ. பயங்கரவாத செயலொன்றை ஒழுங்கு செய்கின்ற , அதனைப் புரியுமாறு பணிக்கின்ற, அல்லது அதனைப்   புரிவதில்  உடந்தையாயிருக்கின்ற அல்லது உதவி செய்கின்ற ; அல்லது 

ஈ. பங்களிப்பானது வேண்டுமென்றும் மற்றும் பயங்கரவாதச் செயலை முன்னெடுத்துச் செல்லும் இலக்குடனும்  அல்லது குழுவின் பயங்கரவாதச் செயலொன்றைப் புரிவதற்கான உட்கருத்துப் பற்றிய அறிவுடனும் செயற்படுமிடத்து, பொது நோக்கமொன்றுடன் செயலாற்றுகின்ற ஆட்கள் குழுவினால் பயங்கரவாதச் செயலொன்று புரிவதில் பங்களிக்கின்ற 
எவரேனும் நபர் எனப் பொருள்படும்.

பயங்கரவாதச் செயல் என்பது ; 

அ. இச்சட்டத்திற்கான முதலாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்ட பொருத்தனைகளுள்  ஏதேனுமொன்றின் நோக்கெல்லைக்குள் அல்லது  வரைவிலக்கணத்தினுள் தவறொன்றாக  அமைகின்ற செயல் ; 

ஆ. ஆயுதமேந்திய மோதல்  நிலைமையொன்றில் அல்லது வேறு வகையாக பொது மகன் ஒருவருக்கு அல்லது பகைமைகளில் தீவிரமாகப் பங்கெடுக்காத வேறெவரேனும் நபருக்கு மரணத்தை அல்லது பாரதூரமான உடலூறுபாட்டை விளைவிக்கும் உட்கருத்துக் கொண்டதும் மற்றும் அத்தகைய செயலின் நோக்கம், அதன் தன்மையினால் அல்லது சந்தர்ப்பத்தினால் ஏதேனும் செயலைச் செய்யுமாறு அல்லது செய்யாது தவிர்க்குமாறு ஒரு குடிசனத்தை அச்சுறுத்துவதாக அல்லது  ஓர் அரசாங்கத்தை அல்லது சர்வதேச ஒழுங்கமைப்பை வலுக்கட்டாயப்படுத்துவதாக உள்ள வேறு ஏதேனும் செயல் 

அல்லது 

இ. ஐ அரசாங்கத்தை செல்வாக்கிற்கு உட்படுத்துவதற்கென அல்லது பொது மக்களை அல்லது பொது மக்களின் ஒரு பிரிவினரைச் செயலிழக்கச் செய்வதற்கென வடிவமைக்கப்பட்டதும் ; அத்துடன், 

ஐஐ. அரசியல், மத அல்லது இலட்சியம் சார்ந்த நோக்கமொன்றை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்திற்கென செய்யப்பட்டதுமான,

பயன்பாடு அல்லது அச்சுறுத்தலின்  செயற்பாடாகும் என்பதுடன், அத்தகைய செயற்பாடானது, 

அ அ. நபரொருவருக்கு எதிராக பாரதூரமான வன்முறையை ஈடுபடுத்தும் ;
(ஆ ஆ) ஆதனத்திற்குப் பாரதூரமான சேதத்தை  ஏற்படுத்தும் ;
(இ இ) செயலைப் புரிகின்ற நபரைத் தவிர்த்த பிறிதொரு நபரின்   உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ;

(ஈ ஈ) பொது மக்களின் அல்லது பொது மக்களின் ஒரு பகுதியினரின் சுகாதாரத்திற்கு அல்லது பாதுகாப்பிற்கு பாரதூரமான ஆபத்தை  உருவாக்கும்; அல்லது  

(உ உ) இலத்திரனியல் முறைமையொன்றில் பாரதூரமாக தலையிடுதலுக்கு அல்லத பாரதூரமாகச் செயலிழக்கச் செய்வதற்கென வடிவமைக்கப்பட்ட செயற்பாடானதுமாகும்.

1 comment:

  1. சிறிபால சார் ...

    உங்களின் கருத்துகளின்படி கடைசி ஆறு பிரிவுகளிலும் மேர்வின் சில்வாவும் சில பிரிவுகளில் பொது பல சேனாவும் உள்ளடன்குகின்றதா?

    உங்களுக்கு தெரியா விட்டால் ஸ்ரேஷ்ட சட்டத்தரணி (அரசியல் காய் நகர்த்துதல்) றவூப் ஹக்கீமுக்கிட்ட கேட்டு சொல்லுங்கோ ?

    ReplyDelete

Powered by Blogger.