Header Ads



ஹலால் சான்றிதழ் குறித்து ஜனாதிபதி மஹிந்தவின் நிலைப்பாடு என்ன? - ஐ.தே.க. கேள்வி


முஸ்லிம் மக்களின் உலமா சபை வழங்குகின்ற ஹலால் சான்றிதழை ரத்துச்செய்ய வேண்டுமென்பதே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும். இதனை 8 வீதமான முஸ்லிம் மக்களுக்கு உணர்த்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் ஹலால் சான்றிதழ் விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடு என்னவென்பதனை வினவுகின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஹலால் சான்றிதழ் தொடர்பில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவிக்காவிடின் பிலியந்தலையிலிருந்து மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
  
ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பில் பொதுபல சேனா பாரிய கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. ஆனால் ஹலால் சான்றிதழ் விவகாரம் குறித்து ஜனாதிபதியின் நிலைப்பாடு என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.ஹலால் சான்றிதழ் விவகாரம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. அதனை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.


6 comments:

  1. இதுக்கு மேலயும் இந்த கட்சியில் இருக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும்........? பதவியை தூக்கி எரிந்து விட்டு வர வேண்டும்......செய்வீர்கலாடa?

    ReplyDelete
  2. Ippediyellam Pesiye Kaalem Poivittehu inium Varuma inthe RANIL Party? NEVER COME AGAIN.

    ReplyDelete
  3. Really mr. riya mo.........

    ReplyDelete
  4. anna thu pathaviya vituratha avanuhal islam markatha venum anra vituvanunga

    ReplyDelete
  5. you go fool, ask govrn minister to leave their post and joint the opposition, or lick mr . shoes. ok. you must know who made this hallal problem, the government is complete responsibility.

    ReplyDelete
  6. enga mujibur rahman asad saali wallavaru pachchanthi muslim ministars

    ReplyDelete

Powered by Blogger.