சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சையின் மாற்றங்கள் குறித்து ஆராய்வு - அமைச்சர் ஹக்கீம்
சட்டக்கல்லூரியின் நுழைவு பரீட்சையின் மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் 02-02-2013 இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சட்டத்துறை கல்வி சபையினால் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவின் புதிய செயலாளரை நியமித்தமை தொடர்பில் இன்றைய நிகழ்வில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கருத்து வெளியிட்டிருந்தார். சிரேஷ்ட தன்மையை அடிப்படையாக கொண்டு மேல் நீதிமன்ற நீதிபதியொருவர் இதற்கான நியமனத்தை பெற்றுள்ளார்.
இந்த நியமனம் தெளிவான தன்மையுடன் பக்கச்சார்பின்றி நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவின் புதிய நியமனங்கள் அரசியலயமைப்புக்கு அமைவானது என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment