மாடு அறுப்பதற்கு இஸ்லாம் விதித்துள்ள நிபந்தனை பற்றிய புதிய கண்டுபிடிப்பு
(மூத்த ஊடகவியலாளர் ஜே .எம்.ஹாபீஸ்)
அடிக்கடி இஸ்லாமிய கருத்துக்கள் அல்லது திருக்குர் ஆன் வசனங்களுக்கு புதுப்புது விளக்கங்கள் வழங்கப் பட்டு இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் அபாண்டங்கள் சுமத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம்.
விசேடமாக பேரினவாதிகளில் விசமப் பிரசாரம் எம்மை வியப்பில் இட்டுச் செல்கிறது. அந்த அடிப்படையில் அண்மையில் முக்கிய நகரமொன்றில் முக்கிய நிறுவனம் ஒன்றில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு இரகசியமாக இடம் பெற்றுள்ளது. இலங்கையில் மிகப் பழைமை வாய்ந்த பௌத்த அமைப்பின் பெயரில் இயங்கும் ஒரு மண்டபத்தில் இச்சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
இதுவிடயமாக பேரினத்தைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் மூலம் வெளிவந்த புதிய தகவல் இதுதான்.
திருக் குர்ஆனில் மாடு அறுப்பு தொடர்பாக கூறப்பட்ட விடயமாக அவர் சொன்னது
'நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்பு தட்டம் ஒன்றின் மீதிருந்தே மாடு வெட்டப்படவேண்டும்' என்று குர்ஆன் கூறுவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு என்ன ஆதாரம் உண்டு என நாம் கேட்டோம். அதற்கு அவர் சொன்ன விளக்கம் என்னிடம் பிரிண்ட் பண்ணப்பட்ட குர்ஆன் பிரதி இருக்கிறது என்றார். அதைக் கொண்டு வந்து காட்டும்படி நாம் சவால் வீடுத்தோம். ஆனால் அது இன்னும் கிடைக்கவில்லை.
மூடர்களுடனும் குதர்க்கவாதிகளுடனும் தர்கிக்க வேண்டாம் என்ற கருத்து எமக்கு நினைவிற்கு வந்ததன் காரமாக அதை மேலும் அலசி ஆராய முற்பட வில்லை. அது எமது நற்பிற்கும் பொருத்தமில்லை.
பொறுமையாக இருந்து அதன் விபரத்தை அறிய வேண்டும் எனக் கருதி சற்று நிதானமாகச் செயல்பட்டோம். அதே நேரம் இதற்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பும் எனது நண்பர் ஒருவர் இதே விளக்கத்தை என்னிடம் சொன்னார். இவர்கள் இருவருக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. ஆனால் இருவர் சொன்ன விளக்கமும் ஏறக்குறைய அல்ல நூறு சதவீதம் ஒத்த தன்மை காணப் படுகிறது.
நான் அறிந்த வரை அப்படி ஒரு குர்ஆன் வசனம் பற்றி எந்த ஒரு உலமாவும் விளக்கம் தரவில்லை. ஆனால் அப்படி ஒரு விளக்கம் உள்ளதாக பேரின வாதிகள் விசமப் பிரச்சாரம் செய்கின்றனர். எமது பழைய நண்பர் இரண்டு வருடங்களுக்கு முன் சொன்ன அதே விளக்கத்தை நேற்று அவருடன் தொடர்பில்லாத நண்பர் மேற்படி ஊடக சந்திப்பிற்குச் சென்று திரும்பிய பின் கூறிய விளக்கமும் ஒன்றுதான்.
அதாவது சூடாக்கப்பட்ட இரும்புத் தட்டத்தில் நிற்க முடியாது. எனவே மாடு அறுக்கக் கூடாது என்பதையே குர்ஆன் கூறுகிறது என்பதே அவர்கள் இருசாராரும் வேறுவேறு காலப் பகுதியில் முன்வைத்த கருத்துக்களாகும்.
எனவே திருக்குர்ஆன் வசனம் என்று கூறி பிழையான தகவல்கள் நீண்டகாலமாக அச்சு வடிவில் பகிரப்படுகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள இச்சம்பவம் வழிகாட்டுகிறது.
இதுபற்றி எமக்குக் கவலை இல்லை எனக் கருதினாலும் விஸ்வரூபம் போன்ற மற்றொரு புயல் இது போன்ற கருத்துக்களாக இருக்க முடியும். எனவே இதில் நாம் விழிப்படைந்தால் மட்டும் போதாது. இப்படியான கருத்துக்களை வெல்லும் கருத்துக்களும் எம்மிடம் இருக்கவேண்டும் என நாம் கருத இடமுண்டல்லவா?
ALLAH THAAN PAATHUKAAKKA PORUNTHIKKONDA KUR. AAN. NAMMIDAM IRUKKUMPOTHU NAAM INTHA SILLARAIKALUKU PATHIL SOLLA VENDIYATHILLAI IPPADIYAANA KOOTTHUKKAL KAALAM KAALAMAAGA NADANTHE VANTHULLANA.
ReplyDelete