Header Ads



கல்முனை கடற்கரைப் பள்ளி வீதி அபிவிருத்திக்காக ஒன்றுபட்ட அரசியல்வாதிகள் (படங்கள்)



(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை கடற்கரைப் பள்ளி வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வும் பொதுக்கூட்டமும் இன்று (27.02.2013) நடைபெற்றது.

இவ்வீதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கடற்கரை பள்ளி வீதியின் பிரதான வீதிச் சந்தியிலும் பொதுக்கூட்டம் அல்-பஹ்றியா மாகாவித்தியாலய மண்டபத்திலும் நடைபெற்றது.

கடற்கரைப் பள்ளி வீதியானது 39 மில்லியன் ரூபா செலவில் இருமருங்கிலும் வடிகான் அமைத்து கொங்றீட் வீதி அமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை இந்நிகழ்வின் பிரதம அதிதி கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ் உதுமாலெப்பையினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கிழக்குமாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எ.பறகத்துள்ளா ஆகியோர் கலந்து கொண்டனர்.






1 comment:

  1. ஆனாலும் இவர்களின் இதயங்கள் பல கோணம்.கழிசடை அரசியல் செய்பவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.