Header Ads



சிறுமியின் பரிதாப மரணம் - வைத்தியசாலைக்கு எதிராக நீதிமன்றம் சென்ற தாய்


(Tm) நவலோகா வைத்தியசாலையில் கேள்விக்குரிய விதமாக உயிரிழந்த ஐந்தரை வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள், பணத்தின் வலுவால் மூடி மறைக்க அனுமதிக்க வேண்டாம் என அச்சிறுமியின் தாய், நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்தார். 

வலியால் வருந்துவது போல சில அறிகுறிகள் காணப்பட்டதால் ஜனவரி 31இல், தனது மகளை கொழும்பு, நவலோகா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். 

'தனது மகளை பார்வையிட்ட வைத்தியர், இரத்த பரிசோதனைகளையும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறிக்கையையும் பெறுமாறு கூறினார். தனது மகள் புத்தினி கௌசல்யாவுக்கு மயக்க மருந்தைக் கொடுத்து எம்.ஆர்.ஐ ஸ்கானிங் இயந்திரத்துக்குள் கிடத்தினர். 30 நிமிடங்களின் பின் ஒரு சத்தம் கேட்டது. 

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தின் பின் எனது மகளை வெளியே எடுத்தனர். அவள், நீல நிறமாகிவிட்டதையும் வயிறு வீங்கிவிட்டதையும் நான் கண்டேன். இது நடந்து 10 நிமிடங்களின் பின்னரே வேறு வைத்தியர்கள் அங்கு வந்தனர். 

பின்னர், எனது மகளை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர். அவள் உடல் குளிர்ந்துவிட்டது என நான் கூறிய பின், அவளை வெப்பம் வழங்கும் இயந்திரத்தினுள் வைத்தனர். அவர்கள் எங்களை நான்கு நாட்களாக ஏமாற்றினர். 

4 ம் நாள் அவளது மூக்கினுள் எறும்புகள் வரிசையாக செல்வதை கண்டேன். தனது மகள் ஸ்கான் இயந்திரத்தினுள் இறந்துவிட்ட போதிலும் நிர்வாகம் அதை மறைத்து மகள் நான்கு நாட்களின் பின் இறந்ததாக அறிவித்தனர்' என்று அச்சிறுமியின் தாய் கூறினார். 

அடுத்த விசாரணை தினத்தில் வைத்தியசாலை அதிகாரிகளை சர்சியமளிக்க அழைப்பாணை விடுப்பதாக கூறிய நீதவான், இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். 

1 comment:

  1. This is ignorance of medical officers or staffs / qualified medical officers not involved in taking MRI scanning child-Kowsalya.

    The above reasons might be cause of death of Kowsalya.

    Hospital management might be attempted to hide actual cause of death by admitting in ETU/ICU in 4 days thereafter gently/slowly revealed the news of child death.

    Likewise, hospital people( not all) are very clever in hiding their own fault and ignorance.

    However, mother of Kowshalya must be continued this case for satisfactory verdict by the court.But Nawaloka hospital might apply their influence and money-strength to weak/defeat this case.

    therefore, Kowshalya's mother should inform this case to human rights ,UNICEF and other necessary local social welfare org.

    We also should help to Kowsalya's mother to proceed this case without any hesitation because one day similar unfavourable occurance may happen to our relatives in the hospital environment.

    Impartial investigation must be carried out to give good lesson to relevant officers/staffs if they would be wrong in legal ground.

    My deepest condolence on child Kowsalya and her parents

    ReplyDelete

Powered by Blogger.