பொதுபல சேனாவை பாலூட்டி வளர்க்கும் அரசிற்கு எதிராக கண்ட பிரேணை அவசியம்
கிழக்கு மாகாணசபையில் பொதுபலசேனாவுக்கெதிராக கண்டன பிரேரனையை கொண்டு வந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர், அந்த இயக்கத்தை பாலூட்டி வளர்க்கும் அரசாங்கத்துக்கெதிராக கண்டன பிரேரணை முன்வைக்காமை மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது,
கடந்த சில மாதங்களுக்கு முன் பொதுபல சேனா முஸ்லிம்களுக்கெதிரான கருத்துக்களை முன்வைத்த போது அரசின் உயர்மட்டங்களை சேர்ந்தோர், இது சிறியதொரு குழுவின் நடவடிக்கை என்றும் முஸ்லிம்கள் இது பற்றி அச்சப்படத்தேவையில்லை என்றும் கூறி இது விடயத்தை அலட்சியப்படுத்தியதன் மூலம் அவ்வியக்கத்தை வளர விட்டார்கள். அந்த வேளையில் இவ்வாறான வார்த்தை மூலம் முஸ்லிம் சமூகம் திருப்திப்பட முடியாது மாறாக அரசாங்கம் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி இனவாத இயக்கங்களை கட்டுப்படுத்த வேண்டும் என உலமா கட்சி மட்டுமே பகிரங்கமாக அரசைக்கோரியது.
இந்த வேளைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற முஸ்லிம் ஏமாற்றுக்கட்சிகள்; பாராளுமன்றத்தில் இது பற்றிப்பேசாமல் மௌனம் காத்ததனாலும், முஸலிம்களுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை தடுக்க அரசை வலியுறுத்தினால் தமது பதவிகள் பறிபோகும் என்ற அச்சத்தினாலும் பொது பல சேனா வளர்ந்து வெளிப்படையாகவே விசத்தை கக்கி வருகிறது.
இதுவெல்லாம் நடந்து இன்று முஸ்லிம் சமூகத்துக்கெதிராக காலக்கெடு நிர்ணயித்துள்ள நிலையில் இப்போது கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் ஜமீல், பொது பலசேனாவை மட்டும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற பிரேரணை முன்வைத்துள்ளார். உண்மையில் இந்த உறுப்பினர் மனச்சாட்சி உள்ளவராயின் பொதுபல சேனாவையும் அதனை பாலூட்டி வளர்க்கும் அரசையும், முஸ்லிம்களின் பிரச்சினை என்றால் பாராளுமன்றத்தில் மௌனவிரதம் இருக்கும் அமைச்சர் ரஊப் ஹக்கீம் உட்பட அனைத்து அரச தரப்பு முஸ்லிம் உறுப்பினர்களையும் கண்டிக்கும் தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும். இதனை விடுத்து பொதுபலசேனாவை மட்டும் கண்டிக்கும் பிரேரனை முன் வைத்தமை இத்தகையோரின் மக்களை ஏமாற்றும் மாமூலான நடவடிக்கையாகும்.;
இன்று கிழக்கு மாகாணத்தில் ஹலாலுக்கு ஆதரவான கண்டன பிரேரணை நிறைவேற்றி உழ்ழீர்கள். இது உண்மையில் உங்களைப்போன்ற மோடயர்கழுக்கு இன்று சாதனையாக இருக்கலாம். ஆனால் நிட்சமாக சமூகத்துக்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட பச்சைத் துரோகம். காரணம், மற்றய 8 மகாநங்களிலும் ஆட்சி சிங்கள ஆட்சியாழர்களிடம்தான் உழ்ழது. ஆக, அந்த 8 மகாநங்களிலும் ஹலாலுக்கு எதிரான கண்டன பிரேரணை கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு அது பாராளுமன்றத்துக்கு சமர்பித்து பாரழுமன்ற வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டால், அது முழு இலங்கையிலும் ஹலாலுக்கு ஆப்பு வைப்பு நிகழ்வு நடக்கும். அப்போது இந்த கிழக்கு மண்ணின் மக்கு ஜமீலோ அல்லது இந்த காங்கிரசோ வாய் மூடி மடந்தையாய் விடுவார்கள். இதுதான் நிட்சயம் நடந்தேறும். இதுதான் இன்று ஜமீல் என்ற ஈரான் விசுவாசியால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எல்லா மக்களும் உணரும் காலமும் வேகுதூரமில்லை.
ReplyDeleteWell said my brother, இவர்கள் எல்லோரும் சேர்ந்து BBS மற்றும் ராவய போன்றவர்களுக்கு கூட்டம் சேரும் வண்ணம் நடந்து கொள்கிறார்கள். மக்கள் தான் புத்தியுள்ளவர்களை, வேலை செய்யும் ஆற்றல் உள்ளவர்களை அனுப்ப வேண்டும்... அரசியலில் மூத்தவர்கள், மேதாவிகள், மேலிடத்துக்கு விசுவாசமானவர்கள் ..... இப்படியெல்லாம் யோசித்து, யோசித்து கடைசியில் அனுப்புவது கூழ்முட்டைகளை. இப்போ கிழக்கில் காசு தானே ஆட்சியைத் தீர்மானிக்குது... நமது சோம்பேறி மக்களும் அதையே விரும்புகிறார்கள். சமூகப் பிரச்சினையை விட சொந்தப் பிரச்சினையை தான் மக்களும் , (வழமை போல ) அரசியல்வாதிகளும் முன் வைக்கிறார்கள். உரிமை , பொதுப் பிரச்சினை, சமூகத்துக்கான பொதுப்படையான வேலைத் திட்டம்... இப்படி யோசிப்பவர்களும் இல்லை. இருக்கும் ஒரிருவர்களுக்கும் இது போன்ற அரசியல்வாதிகளால் பிரச்சனை.. (மக்கள் ஆதரவும் குறைவு..)மக்களுக்கு வேலை செய்ய விருப்பமோ, தேவையோ இவ்வரசியல் வாதிகளுக்கு இல்லை. தங்கள் அரசியல் காயை நகர்த்த இது போன்ற மூடத்தனம். இவர்களும் செய்வதில்லை செய்பவனை செய்ய விடுவதும் இல்லை. அப்புறம் இவர்களுக்கும் சுறுசுறுப்பாய் செய்ய வேண்டி வருமே!!!!! சோம்பேறிகள்.... மக்கள் புரிந்ததாய் இல்லை சகோதரரே... கிழக்கு மாகாண சபையில் உள் சென்று பாருங்கள் உங்கள் தலை சுற்றும்.
ReplyDelete