Header Ads



அமெரிக்க மிரட்டலை புறக்கணித்து வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தியது



அணு ஆயுதங்களை குவித்து வைத்திருப்பதாக உலக நாடுகளால் குற்றம் சாட்டப்படும் வடகொரியா, கடந்த 2009-ம் ஆண்டு அணுகுண்டு சோதனையை நடத்தியது. இந்த சோதனை நடத்தப்பட்ட இடத்தில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம் அசாதாரணமானது என ஐ.நா. சபையின் அணு ஆயுத சோதனை கண்காணிப்பு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தை அடுத்து தென் கொரியா ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வடகொரியா 3-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியதை உறுதி செய்துள்ளது. ஆனால், 2006, 2009 ஆண்டுகளில் பயன்படுத்தியதைவிட குறைவான சக்தியைக் கொண்டே இந்த சோதனை செய்யப்பட்டுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. மிகப் பாதுகாப்பாகவும், மிகச்சரியான முறையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையால் இயற்கைச் சூழலில் எந்தவித மோசமான விளைவுகளும் ஏற்படவில்லை என்று வடகொரியா அரசு தெரிவித்துள்ளது. 

வடகொரியாவின் இந்த அணுகுண்டு சோதனைக்கு ஐக்கிய நாடுகளின் தலைவர் பான்-கி-மூன், அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

வடகொரியா இன்று நடத்திய அணுகுண்டு சோதனை ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு முற்றிலும் எதிரானது என பான்-கி-மூனின் செய்தித் தொடர்பாளர் மார்டின் நேசிர்கி தெரிவித்துள்ளார். 

வடகொரியா இன்று காலை நடத்திய அணுகுண்டு சோதனைக்கு ஐ.நா. சபையின் தலைவர் பான் கி மூன், அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வடகொரியாவின் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து ஆலோசனை நடத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இச்சபையின் தலைவர் 2 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பாதுகாப்பு சபையின் தற்போதைய தலைவராக தென் கொரியா நாட்டின் வெளியுறவு மந்திரி கிம் சங் ஹுவான் தலைமையில் இந்த அவசர ஆலோசனை கூட்டம் நியூயார்க்கில் நடைபெற உள்ளது. 

No comments

Powered by Blogger.