Header Ads



பாடசாலைக் காலத்திலேயே மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி - அமைச்சு நடவடிக்கை


(ஏ.எல்.நிப்றாஸ்) 

நாட்டிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட சில பாடசாலைகளில் தொழிற்பயிற்சி மையங்களை அமைப்பதற்கு இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சும் கல்வியமைச்சும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய முதலாவது பாடசாலை தொழிற்பயிற்சி மையம் கொழும்பு ஆனந்தா கல்லூhயில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக் கல்வியை தொடரும் ஏக காலத்தில் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி கற்கைகளை வழங்குவதே இத்திட்டத்தின்; அடிப்படை இலக்காகும். இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

கொழும்பு ஆனந்தா கல்லூரி அதிபர் கேர்ணல் எல்.எம்.பி. தர்மசேன தலைமையில் இடம்பெற்ற பயிற்சி மைய அங்குரார்ப்பண நிகழ்வில் இளைஞர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் கேர்ணல் தர்சன ரட்ணாயக்க உள்ளிட்டோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர். 

இத்திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் உபகரணங்களுடனான தொழிற் பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படுவதுடன் தொழிற்பயிற்சி அதிகார சபையினால் போதனாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். கற்கைநெறியை பூர்த்தி செய்யும் பாடசாலை மாணவர்களுக்கு அரச அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். 


No comments

Powered by Blogger.