பாணந்துறையில் பௌத்த விகாராதிபதி மீது அசிட் தாக்குதல்.
(ISBAHAN SHARFDEEN)
பாணந்துறை, அலுபோமுல்ல அருக்கொட பிரதேச விகாராதிபதி ஒருவருக்கு நேற்று இரவு எசிட் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது,
அருக்கொட இந்த்ராஸாராமய விகாராதிபதி பூஜ்ய அபேகொட பியரதன ஹிமிக்கே இவ் எசிட் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விகாராதிபதி விகாரையின் ஓய்வரையில் இருக்கும் போது இனந்தெரியாத ஒருவர் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இருப்பனும், தாக்குதலால் விகாராதிபதிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை.
இதுவரை சந்தேசநபர்கள் அடையாளங் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment