ஹிஜாப் அணிந்து, விளையாட்டு துப்பாக்கி மூலம் கொள்ளையடிக்க முயன்றவர் கைது
கண்டியிலுள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளையில் கொள்ளையடிப்பதற்கு முற்பட்டதாகக் கூறப்படும் இராணுவ உயர் அதிகாரி ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஹிஜாப் உடை அணிந்திருந்த இந்த இராணுவ உயர் அதிகாரி விளையாட்டு துப்பாக்கி மற்றும் கத்தியுடன் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் பெண் போன்று பாசாங்கு பண்ணிய இவரை வங்கியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மடக்கிப்பிடித்தனர்.
கொத்மலையில் பணியாற்றும் இராணுவ அதிகாரி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
Hijabukku aappu waikkaporangayya............. usara irunga
ReplyDeleteIt's an other conspiracy of Extremist( Including Government) to Ban Islamic Dress.
ReplyDelete