அன்று முஸ்லிம் இளைஞர்கள் கொலை சந்தேக நபர் - இன்று பிரதம அதீதி (படங்கள்)
(ஜே.எம்.ஹபீஸ்)
மடவளையை அண்மித்த பகுதிகளின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யவதாக பாராளுமன்ற அங்கத்தவர் லொகான் ரத்வத்தை தெரிவித்ததை அடுத்து மடவளை அரசியல் வரலாற்றில் பதிந்த ஒரு கரும்புள்ளியை ஒளிக்கீற்றாக்கும் முயற்சியில் நம்பிக்கை பிறந்துள்ளதாகப் பலர் தெரிவித்தனர்.
இன்று(26.2.2013) மடவளை மதீனா மத்திய கல்லூரயின் வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டி மேற்படி கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற போது கண்டி மாவட்ட எம்.பி.யும் பாத்ததும்பறை ஸ்ரீ.சு.க. பிரதான அமைப்பாளருமான லொகான்ரத்வத்தை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பரிசளிப்பு வைபவத்தில் அவர் தெரிவித்தாவது,
1934ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்ட இப்பாடசாலை பல்வேறு முன்னேற்றப்பாதைகளிலும் அடி எடுத்துச் செல்வதைக் காண முடிந்தது. அதிலொன்று வருடா வருடம் விளையாட்டுப் போட்டியை நடத்தி வருகிறது. விளையாட்டுத்துறையும் கல்விக்கு இணையாகத் தேவையான ஒன்று. இருப்பினும் மடவளை மதீனா மத்திய கல்லூரி மைதானம் போதிய வசதிகள் அற்றுக் காணப்படுவதாக அறிந்தேன். காலப் போக்கில் இதனை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
மடவனையையும் அதனை அண்மித்த பகுதிகனையும் உள்ளடக்கிய பிரதேச உற்கட்டமைப்பு வசதிகளை இதன் பிறகு தொடர்ந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன் என்றார்.
13 வருடங்களுக்கு முன்பு மடவளை அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற 10 முஸ்லிம் இளைஞர்கள் கொலைகளுடன் தொடர்பு பட்ட சந்தேக நபர் பட்டியலில் இருந்த அதிதியின் வருகைக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த போதும் அமைதியாகக் இக் கூட்டம் இடம் பெற்றது. அத்துடன் மடவளையில் பதிந்த அரசியல் கரும்புள்ளி எதிர்காலத்தில் ஒளிக் கீற்றாக மாற்றமடையும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளதாகப் பலரும் தெரிவித்தனர்.
Post a Comment