ஹலால் நெருக்கடி தொடர்பில் சகலருடனும் பேச பாராளுமன்ற குழு தீர்மானம்
ஹலால் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக்க தலைமையிலான குழு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று கூடி ஆராய்ந்துள்ளது. இக்கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான பௌசி ,ஹக்கீம், ரிசாத் மற்றும் அதாவுல்லா ஆகியோர் பங்கேற்று ஹலால் விவகாரம் முற்றிலும் முஸ்லிம்களின் மார்க்கக்கடமையென்றும் இதில் சில இனவாதக்குழுக்கள் தலையிடுவது நியாயப்படுத்தக்கூடியதல்ல என்றும் வாதிட்டுள்ளனர். ஏனைய சமூகங்களுடன் புரிந்துணர்வுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் ஹலால் விடயம் தொடர்பில் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களைக்கண்டு வேதனையும் விசனமும் அடைவதாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இதுதொடர்பில் தொடர்ந்து கலந்தாலோசனைகள் நடத்துவது என்றும் இந்தக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பதில்லை எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றில் இருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் முஸ்லிம் அமைச்ர்களுடன் சம்பிக்க ரணவக்க, தினேஸ் குணவர்த்தனா, விமல் வீரவன்ச, டகள்ஸ் தேவானந்தா, டீ.யூ குணசேகரா உள்ளிட்டோடும் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் ஹலால் விவகாரம் தொடர்பில் ஜம்மியத்துல் உலமா சபை மற்றுமு; பொது பல சேனா ஆகிய அமைப்புக்களையும் அழைத்து பேசுவதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment