Header Ads



இலங்கைக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஜப்பான், பங்களாதேஸ், ருமேனியா, நைஜீரியா


இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் இரகசிய அறிக்கை ஒன்றை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் இலங்கை அரசாங்கம் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றுக்காலை இந்த அறிக்கை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம், ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவினால் கையளிக்கப்பட்டுள்ளது. 

பாலித கொஹன்னவுடன் இணைந்து ஜப்பானிய நிரந்தர விதிவிடப் பிரதிநிதி சுனேயோ நிசிடா, பங்களாதேசின் நிரந்தரப் பிரதிநிதி அபுல் கலாம் அப்துல் முமேன், ருமேனியாவின் நிரந்தரப் பிரதிநிதி சிமோனா மிரேலா மிகுலெஸ்கு, நைஜீரியாவின் பிரதி நிரந்தரப் பிரதிநிதி உஸ்மான் சர்க்கா ஆகியோரும் ஐ.நா பொதுச்செயலருடனான இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். 

இந்தச் சந்திப்பில், பாக் கீ மூனுடன் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரிகள் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோ, ஹிரோகி டென் ஆகியோரும் உடனிருந்தனர். மூடப்பட்ட அறையில் நடந்த இந்தச் சந்திப்புத் தொடர்பான விபரங்கள் ஏதும் பான் கீ மூனின் அதிகாரபூர்வ சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டிருக்கவில்லை. 

அதேவேளை, பான் கீ மூனிடம் இலங்கை சார்பில் பாலித கொஹன்ன மற்றும் ஜப்பான், பங்களாதேஸ், ருமேனியா, நைஜீரியா நாடுகளின் பிரதிநிதிகள் கையளித்த அறிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பாக தகவல் எதையும் வெளியிட வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம மறுத்துள்ளார். 

1 comment:

  1. while they are against muslim this muslim country supporting this government, this Muslim country does not have any knowledge about Sri Lankan Muslim,

    these muslim countries are supporting to kill the muslim in Sri lanka

    ReplyDelete

Powered by Blogger.