பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தலைமை பிக்கு
(Gtn) களவி விஹாரையொன்றின் பீடாதிபதி பெண் ஒருவரை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளதாக ஆசிய மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
43 வயதான பெண் ஒருவரே இவ்வாறு பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
பௌத்த பிக்கு ஒருவர் இந்த சம்பவத்துடன தொடர்புடைய காரணத்தினால் பெஹலியகொட காவல்துறையினர் இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தாயான குறி;த்த பெண், பௌத்த பிக்குவுடம் ஆலேசானைப் பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளார். அதன் போது அந்த பௌத்த பிக்கு தம்முடன் பாலுறவு கொள்ளுமாறு பெண்ணை பணித்துள்ளார். இதனை அந்தப் பெண் மறுத்துள்ளார். ஆத்திரமுற்ற பௌத்த பிக்கு, பெண்ணை அறையொன்றில் பூட்டி, பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார் என ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் இந்தப் பிரச்சினையை சமரசத்திற்கு கொண்டு வர முயற்சித்துள்ளதுடன், பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ராகம வைத்தியசாலையில் ஏழு நாட்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முறைபாடு எதனையும் செய்ய வேண்டாம் என பௌத்த பிக்கு பெண்ணுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, ஆசிய மனித உரிமை ஆணைக்குழு, காவல்துறைய மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிடம் கோரியுள்ளது.
இது ஒன்னு..இப்டி எல்லா விசயங்களும் வெளிச்சத்துக்கு வந்தா. இவங்கள்ட சுயரூபம் தெரியவரும்..
ReplyDeleteமனிதனின் இயற்கைத் தன்மையான பாலியல் உணர்வுக்கான தீர்வாக இறைவனால் முன்வைக்கப்பட்டுள்ள திருமன பந்தம் என்ற அழகிய வழிமுறையினை வெறுத்தொதுக்கி இயற்கைக்கு மாற்றமாக சில மதங்கள் முன்வைக்கின்ற பிரமச்சாரம் என்ற மனக்கட்டுப்பாடு சாத்தியமற்றதும் பகுத்தறிவுக்குப் பொருந்தாததுமாகும் என்பதனை அந்த மதப் பெரியார்களும் மத உயர் பீடத்தினருமே நிறுபித்துக்காட்டுகின்றார்கள். மத குருக்களுக்கே பின்பற்ற முடியாத மார்க்கம் பாமரர்களால் எவ்வாறு பின்பற்றப்படும்????????
ReplyDelete