புத்தளத்தில் முஸ்லிம் சமூக பிரதிநிதித்துவம் குறித்து ஆராய்வு
(அபூ நாதில்)
இவ் வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் வடமேல் மாகாண சபை தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் நிறுபான்மை பிரதி நிதித்துவம் தொடர்பான கூட்டமொன்று நேற்று புத்தளத்தில் நடைபெற்றது.
புத்தளம் நகர சபை உறுப்பினர் ஏ.ஓ. அலிகானின் ஏற்பாட்டில் இந்த கூட்டம் இடம் பெற்றது. அலிகானின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கொழும்பு மா நகர சபை மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மா நகர சபை அமைப்பாளர் அர்ஷத் வாஹித், புத்தளம் நகர சபை முன்னால் தலைவர் சக்ரப் மொஹிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment