Header Ads



வடக்கு முஸ்லிம்களுக்கு அநியாயம் நடந்தால்..?

(அபூ தனா)

இலங்கை வாழ் கிழக்கு மாகாண முஸ்லிம்ளே! புத்தளம் முஸ்லிம்களே! மத்திய மாகாண முஸ்லிம்களே! மேல் மாகாண முஸ்லிம்களே! தென் மாகாண முஸ்லிம்களே! சப்ரகமுவ மாகாண முஸ்லிம்களே!

ஓற்றுமையே பலம் என்பார்கள் எமக்கிடையேயுள்ள அரசியல், கட்சி பேதங்களை மறந்துவிட்டு, முன் எப்போதையையும் விட ஒன்றுபட வேண்டிய காலத்தின் கட்டாயம் எமக்கு ஏற்பட்டு உள்ளது. இன்னும் நாம்  தாமதித்தால் எமது இருப்பை இழக்க நேரிடலாம். உடலில் ஒரு உறுப்பிற்கு காயம் ஏற்பட்டால் உடல் முழுதும் துன்பத்தை அனுபவிப்பது போல ஒரு முஸ்லிமுக்கு இன்னல் விளைந்தால் நாம் அனைவரும் கவலைப்பட வேண்டும். அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். எனது பட்டம், எனது பதவி, எனது பொருளாதாரம், எனது குடும்பம் என்ற குறுகிய வட்டத்தில் இருந்துமுதலில் நாம் வெளியேற வேண்டும்.

எமக்கு இறைவன் தந்துள்ள கல்வியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவோம் 1990ல் நாம் தூங்கியதால், வடபுல முஸ்லிமகள் துரத்தி அடிக்கப்பட்டார்கள். வரலாற்றிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்பவன்தான உண்மையான அறிவாளி. வடபுல முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பிலிருந்து நாம் எவ்விதமான படிப்பினைகளைக் கற்றுக் கொண்டோம்..?

நபி(ஸல்) அவர்கள் கூறிச் சென்றார்கள் ஓரு செங்கல் மற்றைய செங்கல்லை எவ்வாறு பற்றிப் பிடித்துக் கொண்டு உள்ளதோ அவ்வாறே முஸ்லிம்களின் ஒற்றுமை இருக்க வேண்டும் என்று  நாம் அப்படி இருக்கின்றோமா..?

வடக்கு முஸ்லிம்களையும், முஸ்லிம் அமைச்சர்களையும் தமிழ் அரசியல் கட்சிகளும், சமயத்தலைவர்களும், ஒன்றிணைந்து படுத்தும் பாடுகளையும், கண்டண அறிக்கைகளையும் பார்த்தும், அறிந்தும் இன்னும் ஏன் மௌனிகளாக இருக்கின்றோம்.

ஆரப்பாட்டம் நடந்தவும், அறிக்கைகள் விடவும் எங்களுக்கும் தெரியும் என்பதை செயல் ரீதியாகக் காட்டுங்கள். அன்று மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த குழுவினருக்கு நாம் பக்கபலமாக இருக்கின்றோம். என்று கூறிய மதீனா வாசிகளின் செயல்களை சிந்தித்துப்பாருங்கள்.

வஞ்சிக்கப்பட்ட வடக்கின் சிறுபான்மை முஸ்லிம்களை மீளக்குடியேற்றாமல் விரட்டி அடிக்கும் திட்டம்,   உளவியல் யுத்தம் என்பன திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெற்று வருகின்றன.

வடபுல முஸ்லிம்களே நாம் உம்மோடு இருக்கினறோம். உங்களுக்கு ஒரு அநியாயம் நடத்தால் அதன் எதிர் ஒலி, புத்தளம் முதல், கிழக்கு மாகாணம் ஈராக் முழு இலங்கையிலும் எதிரொலிக்கும் என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறோம். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே, முஸ்லிம் அமைச்சர்களே, வஞ்சிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிக்காகவும், அம்மக்களுக்காகவும் நாடாளுமன்றத்தில் இனியாவது பலமாக உங்கள் குரல்களை ஒலிப்பீர்களாக.

3 comments:

  1. ABU USAAMA
    OTTRUMAI ENPATHAI ISLAM WALIYURUKINRATHU.INA AIKKIYAM ORUMAIPPAADU ENPANA ORU SAMUTHAYATTHIN AANIWEARKALAAKUM.BUT MUSLIMKAL ILANKAYIL SIRUPANMAYINARAAKA IRUNTHUM ,EMAKKU MATTHIYIL PIRATHEASA WAATHAM THORU THODDU IRUNTHU WARUKIRATHU. NAANKAL COLOMBO MUSLIMKAL ,KANDY MUSLIMKAL ,NAAM UYARNTHAWARKAL, THALAI NAKARANKALIL WALKIROAM ,NAAM SINKALAM PEASUM MUSLIMKAL,ENRA MAMATHAYIL WAALKIROAM.AWAN MADDA KELAPPAAN IWAN KILAKKU MAAKAANATTHAAN, KILAKKU MAAKAANATTHAAN UNMAI MUSLIM ILLAI. ITHANAALTHAAN ANKU SUNAAMI SOORAAWALI POANRA ANARTHANKAL WARUKINRANA, ENRU MADDAMAAKA NINAIKKINROAM.PADITTHA OLAMAAKAL KOODA ITHARKU WITHI WILAKKALLA.IPPADI EM SAMOOKAM JAAHILIYYA KAALATTHIL INNUM IRUNTHAAL EWWARU OTTUMAIPPADUWATHU. SAKOOTHARARKALE SINTHIPPEERKALAAKA.

    ReplyDelete
  2. வட மாகாண முஸ்லிம்கள் வெளியற்றப்பட்டு. சுமார் 22 வருடங்கள் கழிந்த நிலையில்இது வரை காலமும் வட மாகாண முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்களான (அமைச்சர் றிஷாத், ஹுனைஸ்) ஆகியருடன். ஒரே ஒரு தமிழர் அமைச்சர் (டக்லஸ் தேவனாந்தா )மாத்திரமே வட மாகாண முஸ்லிம்களுக்காக வேண்டி குரல் கொடுக்கிறார்கள். ஏனைய முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்கள் யாரும் குரல் கொடுத்ததுமில்லை ,கொடுக்கபோவதுமில்ல அவர்கள் பேரம் பேசுவதுக்கும் .பிரதேச வாசம் பேசுவதுக்கும் தான் சரி மேலே சொல்லப்பட்ட இருவறைவும் தவிர ஏனைய முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்கள் முதுகு எலுப்பு அற்றவர்கள் .

    ReplyDelete

Powered by Blogger.