முஸ்லிம்களுக்கு மாத்திரமே ஹலால் - ஜம்இய்யதுல் உலமா உத்தியோகர்வமாக அறிவிப்பு
(Vi) முஸ்லிம்களுக்கு ஹலால் தரநிர்ணயத்துக்குட்பட்ட உற்பத்திப் பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும் எனவும் முஸ்லிமல்லாதோருக்கு விற்பனை செய்யப்படும் உற்பத்திகளுக்கு ஹலால் தரநிர்ணயம் அவசியம் இல்லை எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தீர்மானித்துள்ளது.
ஹலால் தரநிர்ணயம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே நீண்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னர் தாம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தது.
அ.இ.ஜ.உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தலைமையில் நடைபெற்ற இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் ஹலால் சான்றிதழ் தொடர்பில் பொதுபல சேனா உள்ளிட்ட அமைப்புகளால் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் பாதுகாப்புச் செயலாளருடன் நடத்திய சந்திப்புகள் தொடர்பிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன்.
இங்கு உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் கருத்து வெளியிடுகையில்,,
பாதுகாப்புச் செயலாளருடன் நாம் நடத்திய சந்திப்பின்போது ஹலால் விவகாரத்திற்கு தீர்வு காண்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.பாதுகாப்புச் செயலாளரும் அங்கு பிரசன்னமாகியிருந்த அரச அதிகாரிகளும் இதுதொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்தினர்.
இதற்கமைய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தனது ஹலால் சான்றிதழைப் பெறும் வர்த்தக நிறுவனங்கள் தமது ஹலால் உற்பத்திப் பொருட்களை முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்கும் வகையில் ஒரு பொறிமுறையை வகுக்க ஆவண செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஹலால் பிரிவின் தலைமை அதிகாரி மெளலவி முர்ஷித் முழப்பர் இங்கு கருத்து வெளியிடுகையில்,,
இந்த தீர்மானத்தை ஹலால் சான்றிதழைப் பெற்றுள்ள சகல நிறுவனங்களுக்கும் நாம் அறிவிக்கவுள்ளோம். இது குறித்த வர்த்தக நிறுவனங்களுக்கு சவாலான அமையலாம். இருப்பினும் நாட்டு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இதனை நடைமுறைப்படுத்துவதே பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என நாம் நம்புகிறோம்.
இருந்தபோதிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இந்த தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவுடன் இன்று மாலை கலந்துரையாடப்படும் எனவும் அதற்கமைய எட்டப்படும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள உலமா சபை தயாராகவிருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி,ஹலால் பிரிவு அதிகாரி தாரிக் மஹ்மூத், ஊடகப் பிரிவு பொறுப்பதிகாரி மெளலவி பாஸில் பாரூக் ஆகியோரும் கருத்துக்களை வெளியிட்டனர்.
Allahu Akbar
ReplyDeleteஹலால் சான்றிதழ் பெரும் வர்த்தக நிறுவனகள் என்றால்
ReplyDeleteமுஸ்லிம் நிறுவனங்கள் மாத்திரமா? அல்லது முஸ்லிம்
அல்லாத நிறுவனங்களுமா?
என்னுடைய அபிப்பிராயம், முஸ்லிம் அல்லாத எல்லா
நிறுவங்களுக்கும் வழங்க படும் ஹலால் சான்றிதழ்கள்
நிறுத்த பட வேண்டும்,நிறுத்த பட்ட நிறுவனங்களின்
பெயரும் பொருளும் நாட்டு மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும் . அப்போது தான் அதனுடைய
பொறுமதி பேரினவாத மக்களுக்கு தெரிய வரும்.
அதன் பிறகு அவர்களாகவே ஹலால் சான்றிதழ்
கேட்டு பெற்றுக்கொள்வார்கள்.
நாட்டின் அமைதியையும்,சமாதானத்தையும் ஏற்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்ட சிறந்த முடிவாகவாக இது தோன்றினாலும்,ஏன் அரசாங்க நிறுவன பொறிமுறை பற்றி சிந்திக்கவில்லை என்பது தவிர்க்க முடியாத கேள்வியாகவே நிலைத்து நிற்குமா?அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட அதீத நம்பிக்கை ஜம்மியதுல் உலமா சபைமீது சோதனையாக
ReplyDeleteவீழ்நததா?யாரறிவார் பராபரமே!
அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்கள் அப்படி ஒரு நிலை ஏற்பட்டள் நாம் எந்த உனவு பொருல் வாங்கினாலும் அதில் ஹலால் முத்திரை இருக்கிற்தா என்பதை கவனிக்க வேண்டும்
ReplyDeleteஇது பெரிதாக அலட்டிக்கொள்ளும் விடயம் அல்ல. உணவும், பாவனைப் பொருட்களும் ஹலாலாக இருக்க வேண்டியது முஸ்லிம்களுக்கே. எனவே ஒவ்வொரு முஸ்லிம் நுகர்வோரும் வியாபாரியும் எந்தவொரு பொருளையும் கொள்வனவு செய்யும் போது அது தமக்கு ஆகுமாக்கப்பட்டதா என்பதனை உறுதி செய்வதற்காக ஹலால் முத்திரையை நியமிப்பதுவும், அல்லாத பொருட்களை நிராகரிப்பதுவும் இப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். முஸ்லிம்களுக்கு விற்பதாக இருந்தால் ஹலால் சான்றிதழ் பெற்றுத்தான் ஆகவேண்டும் என்பதனால் அவசியம் ஏற்படும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் போது மாத்திரம் அவற்றுக்கு சான்றிதழ் வழங்குவதனைச் செய்யலாம். கடைசியில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சமன்பாடு ஒன்றுதான்.
ReplyDeleteathu thaan sari
ReplyDelete