இறைவனுக்கும், இலங்கை கடற்படைக்கு நன்றி - காப்பாற்றப்பட்ட வெளிநாட்டினர் தெரிவிப்பு
(ரீ.கே. றஹ்மத்துல்லா)
பணத்திற்காக தொழில் ஆசைகாட்டி எங்களின் உயிர்களை மாய்க்கப் பார்த்தார்கள் இறைவனே எங்களைக் காப்பாற்றியுள்ளான். இலங்கை கடற்படையினர் மற்றும் இரானுவத்தினர் எங்கள் மீது காட்டிய அன்பும் கருனையும் என்றும் மறவோம். இலங்கை மக்கள் கருனையடையவர்கள் என கிழக்கின் ஒலுவில் கடல் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இரவு கடலில் நிர்க்கதியாகி படகில் தத்தளித்துக் கொண்டிருந்த பங்காளதேஷ் மற்றும் பர்மிய பயணிகள் தெரிவித்தனர்.
படகு உதவியாளரான முகம்மது இர்ஷதுல்லா இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்- மலேசியாவில் தொழில் வாய்ப்புப் பெறுவதற்காக நூறுல் ஹக், லிற்றன் என்ற முகவர்கள் மூலம் ஜனவரி 11ம் திகதி பங்களதேஷின் டெக்னா என்ற இடத்திலிருந்து பங்களாதேசைச் சேர்ந்த ஒரு சிறுவனும் இரண்டு பெண்களும் உட்பட 128 பேரும், பர்மாவைச் சேர்ந்த 11 பேருமாக மிகவும் பழமையான மரப்படகு ஒன்றில் எங்கள் பயணம் ஆரம்பமானது. பர்மா கடல்வழியாகச் சென்று தாய்லாந்து கடற்பரப்பினூடாகச் கடக்க முயன்ற போது அங்குள்ள கடற்படையினரால் வழி மறிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டோம். பின்னர் எங்கள் மீது கடுமையாக இரும்புக்கம்பிகளினால் தாக்கி எங்களிடமிருந்த சில பொருட்களையும் பணங்களையும் பறித்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி வேட்டுக்கள் வைத்து எங்களை துரத்தி அடித்தார்கள்.
இவ்வாறு தாய்லாந்திலிருந்து ஒன்பது நாட்களாக பயணித்துக் கொண்டிருக்கையில் அதிக பயணிகளின் பாரம் காரமாக படகின் சிறு துவாரத்தினூடாக நீர் படகின் உள்ளே வந்து கொண்டிருந்தது. நீரை வெளியே இறைக்கும் படி படகோட்டிகள் மற்றும் உதவியாளர்கள் பயணிகள் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். இதேவேளை உணவு மற்றும் குடிநீர் போன்றவைகளும் தீர்ந்து விட்டது. இதனால் தொடந்து அவர்களால் இயங்க முடியாமல் போனது. நாட்கள் செல்ல, செல்ல இவர்கள் மத்தியில் பிரச்சினைளும் சண்டைகளும் ஏற்பட்டு ஒரு குழுவினர் மற்றவர்களை தாக்கி துண்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை படகினை தொடர்ந்து இயக்கமுடியாத நிலையிலும், உணவுத் தட்டுப்பாட்டினாலும் சோர்வும் மயக்கமும் அடைந்த நிலையில் இவர்கள் திருக்கோவில் பிரதேசத்திலிருந்து சுமார் 50 கடல் மைல் தூரத்தில் படகுகொன்று கடந்த சில தினங்களாக தத்தளித்தக் கொன்று நிற்பதை மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் கடந்த கனிக்கிழமை இரவு 10.00 மணியளில் விரைந்து இவர்களை மீட்டுள்ளனர்.
இவர்களில் றஸால் வயது 21 என்பவர் இறந்த நிலையில் காணப்பட்டதுடன் பயணிகளில் அதிகமானவர்களின் உடம்பில் அடிகாயங்களும் காணப்படகின்றன.
மேலும் 14 பேர் மிகவும் மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்வர்களாகவும் இருந்தனர். இவர்களை உடனடியாக அம்புலன்ஸ் வண்டிகள் மூலம்
அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். ஏனையவர்களுக்கும் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பறூஸா நக்பரின் தலைமையில் விசேட சுகாதார வைத்திய அதிகாரிகளைக் கொண்ட குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் மேலும் தொற்று நோய் மருத்துவப் பரிசோதனைகளும் இடம் பெற்று வருகின்றன.
பொலிஸ் மற்றும் இரானுவத்தினர் பூரண பாதுகாப்பும் உதவியும் வழங்கிவருவதடன் திருப்திகரமாக சுகாதார வசதிகள் மற்றும் உணவுகளும் வழங்கி வருவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தமது நாட்டில் வாழமுடியாத சூழ்நிலையை தாம் எதிர் நோக்கியுள்ளதாகவும் மீண்டும் எமது நாட்டுக்குச் செல்ல அச்சப்படுவதாகவும் பர்மாவைச் சேர்ந்த பயணிகள் தெரிவிக்கின்றனர். பங்ளாதேசில் தொழில் வாய்ப்பு மிகவும் குறைந்த காணப்படுவதாகவும் இதனால் தமது குடும் நிலை மிக மோசமாகப்பாதித்துள்ளதாகவும் இதனை அடுத்தே மலேசியவுக்கு பிழைப்புத்தேடிச் செல்வதற்கு முயற்சித்ததாகவும் பங்களாதேசத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதற்காக இச்சட்ட விரோத முகவர்களுக்கு பங்களதேசின் ரூபா 35,000 வரை ஒவ்வொரு வரும் வழங்கியிருப்தாகவும் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் நலன் பற்றி ஆராயும் வகையில் அக்கரைப்பற்று நீதவான் ஜீ.சரவணராஜா மற்றும் பிரதேசசெயலாளர் ஐ.எம்.ஹனிபா மற்றும் இரானுவ, பொலிஸ், வைத்திய அதிகாரிகள் பாரிவையிடுவதையும், தாய்லாந்து கடற்படையினரால் தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள் மற்றும் பயணித்த சிறுவர்களையும் படங்களில் காணலாம்
Post a Comment