முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் கிழக்கில் பௌத்தர்களுக்கு இடையூறு - ரணில்
(Ad) சிங்கள - முஸ்லிம் இனங்களுக்கு இடையில் மோதல் ஏற்பட ஏதுவான காரணங்களை கண்டறிந்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
1915ம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தை போன்று மற்றுமொரு கலவரம் இடம்பெறாமல் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என ரணில் விக்ரமசிங்க இன்று (06) பாராளுமன்றில் தெரிவித்தார்.
இலங்கையில் பௌத்தர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு ஒரே சட்டமே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் பிரஜைகளுக்கு சில சில இடையூறு, நியாயமற்ற செயல்கள் இடம்பெறும் போதெல்லாம் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள - பௌத்த மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஹலால் சான்றிதழ் பெறுவதில் சிங்கள வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனரா என அரசாங்கம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் கோரியுள்ளார்.
எதிர்கட்சித் தலைவரின் இக்கூற்றுக்கு நாளை பதிலளிக்கப்படும் என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
Post a Comment