Header Ads



இலங்கை அரசாங்கம் நிராகரிப்பு


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பெப்ரவரி - மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிப்பதற்காக, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை, “பக்கச்சார்பானது – நீதியற்றது” என்று இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 

கடந்த ஆண்டு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதா என்பது குறித்த அறிக்கையை, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும். 

வரும் கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பதற்கான இந்த அறிக்கையின் வரைபு சிறிலங்கா அரசாங்கத்திடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டது. இதனையே இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 

எனினும் இது குறித்து கருத்து வெளியிட்ட வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, 

“நவிபிள்ளையினால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இம்மாத இறுதியில் சமர்ப்பிப்பதற்காக தயார் செய்யப்பட்ட வரைபு அறிக்கை இலங்கை அரசுக்கு கிடைத்துள்ளது. 

இலங்கை  வெளிவிவகார அமைச்சு அதனை ஆராய்ந்து அவதானிப்புகளை கருத்தில் எடுத்துள்ளது. இந்த வரைபு அறிக்கை தொடர்பாகவோ, அதன் மீதான அவதானிப்புகள் குறித்தோ கருத்து வெளியிட முடியாது.  இன்னமும் இறுதி அறிக்கை வெளியிடப்படாத நிலையில், கருத்து வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.