Header Ads



சித்திலெவ்வை மாவத்தை வித்தியார்த்த மாவத்தை என்று பெயர்மாற்றம் (படம்)


(ஹாபீஸ்)

இரவோடு இரவாக கண்டி சித்திலெவ்வை மாவத்தையின் பெயர் வித்தியார்த்த மாவத்தை என்று நாசகார சக்திகளால் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கண்டியில் பொது பலசேனாவின் பொதுக்கூட்டம் மூடிய அறையில் நடப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த (9.2.2013) தினத்திற்கு முதல் நாள் இரவு பச்சை நிற பெயிண்ட் மூலம் ஸ்பிரே பண்ணப்பட்டு பின்னர் அதன் மீது வெள்ளை நிறத்தில் வித்தியார்த்த மாவத்தை என ஸ்ப்ரே பண்ணப்பட்டுள்ளதைக் காணலாம்.

இதேபோல் கண்டி முஸ்லிம் பள்ளி வீதி (மொஸ்க் லேன்)யின் பெயருக்கும் தார்ப்பூச்சு இடம் பெற்று அதன் இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

யுத்தம் முடிந்து அமைதி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் இக்காலக்கட்டத்தில் நடக்கும் இப்டியான நடவடிக்கைள் எங்கு சென்று முடிவடையும் என்பது புரியாத புதிராக உள்ளது.

அதே நேரம் 1880 களில் அறிஞர் சித்தி லெவ்வை  வெளியட்ட முஸ்லிம் நேசன் என்ற பத்திரிகை முக்கியமான ஒன்று. இன்றுபோல் வளர்ந்த ஊடகங்கள் இல்லாத அக்காலத்தில் அது தலை சிறந்த ஊடகமாக இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அப்படியான ஒரு ஊடகத்தின் மூலம் அவர் விடுத்த பல செய்திகளில் முக்கியமான ஒன்று உண்டு.

'வெள்ளையர்களே உங்கள் சட்டசபையில் எல்லோருமே வெள்ளையர்களாகவே உள்ளனரே. உங்களது சட்டசபை நிதி பரிபாலனம் செய்வது எங்களுக்காகவா? அல்லது உங்கள் நலனுக்காகவா? உங்கள் நலனுக்கு என்பதனால் தானே ஒரே ஒரு சிங்களவரை பெயரளவில் மட்டும் நியமித்து மற்றைய தமிழ், முஸ்லிம் சமூகங்களை புறம் தள்ளியுள்ளீர்கள்' என வினாத் தொடுத்ததன் மூலம் சுதேசிகள் விழிப்படைந்ததாக வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றனர். அதுமட்டு மல்ல இலங்கையின் முதல் நாவலாகவும் தமிழ் மொழியில் வெளிவந்த முதலாவது நாவலாகவும் கருதப்படும் 'ஹசன்பே சரிதம்' என்ற நாவலை எழுதியவர். அவருடை வீடு அமைந்துள்ள இடத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவில் அவரது பெயருக்கு ஒரு அவமரியாதையா? எனக் கேட்க வேண்டியுள்ளது.

இதை விட பேராதனைப் பல்கலைக் கழக மெய்யியற்துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் மூன்று தினங்களுக்கு முன் சித்திலெவ்வை நினைவு தின வைபவத்தில் பின்வருமாறு தெரிவித்தார்.

' இலங்கையின் முஸ்லிம்கள் வரலாற்றிற்கும் சித்தி லெவ்வையின் வரலாற்றிற்கும் தொடர்பு இருப்பதாகவும் சித்திலெவ்வையின் வரலாற்றைப் பாதுகாப்பதன் மூலம் இலங்கை முஸ்லீமகளின் வரலாற்றைப் பாதுகாக்க முடியும் என்றார். சித்திலெவ்வையின் வீட்டைப் பாதுகாப்பதன் மூலம் அதனை ஒரு அருங்காட்சியகமாக மாற்றவேண்டும். அதில் வரலாற்றுத் தடயங்கள் வைக்கப்பட வேண்டும். ஆனால் அவருடைய மீசான் தூண்களைக் கூட பாதுகாக்க முடியாது உள்ளோம்.

இது கண்டி மக்கள் செய்ய வேண்டிய பணி' என்றும் குறிப்பிட்டார். 

ஆம் அவரது மீசான் மட்டுமல்ல அவர் வாழ்ந்த வீட்டின் முன் உள்ள பெயர் பலகையை கூட பாதுகாக்க முடியாத சமூகமாகி விட்டோம். அதனை விட ஆச்சரியம் என்ன தெரியுமா? இதன் விளைவை அறியாத மக்கள் நமக்கேன் அப்பா இந்த வம்பு. அது வித்தியார்த்த மாவத்தையாகலே இருக்கட்டும் என்பது போல எமது பொது சனங்களும் அரசியல் வாதிகளும் சமூகத் தலைவர்களும் மௌன விரதம் அனுஷ்டிப்பது மற்றொரு வியப்பாகும். இது பற்றி எவருமே அலட்டிக் கொள்ளவில்லை.

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் கண்டியைச் சேர்ந்த பிரபல மூத்த ஊடக வியலாளர் மர்ஹூம் ஐ.ஏ.றஷாக் என்னிடம் பின்வருமாறு நேரடியாகக் கூறினார். 'சித்திலெவ்வை மாவத்தை என்ற நாமம் பரிபோகும் நிலையில் இருக்கிறது. இது தொடர்பான சகல தஸ்தாஜூவேக்கலையும் நான் வைத்துள்ளளேன். அடிக்கடி பெயர் பலகை  உடைபடுகிறது. இது தொடர்பாக கண்டி வர்த்தகர் சங்கத்தினூடாகவும்  ஊடகங்களுக்கு  ஊடாகவும் அடிக்கடி தகவல் வழங்கி வருகிறேன். அதைப் பாதுகாக்க நான் பாரிய பிரயத்தனம் எடுத்துவருகிறேன். இன்னும் சிறிது காலத்தில் நான் இல்லாமல் போகலாம். ஆனால் உங்களைப் பொன்றவர்கள் பத்திரிகையாளர்களாக இருக்கும் வரை இதுவிடயமாக பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்' என்றார். 

அன்று அவர் ஊகித்த விடயம் இன்று நடந்துள்ளது. எனவே ஊடகம் என்ற வகையில் வெளிப்படுததியுள்ளோம். பாதுகாப்பது அல்லது நடவடிக்கை எடுப்பது சமூகத்தினதும் சமூகத்ததலைவர்களது பொறுப்பு என்பதை நினைவுறுத்துவதில் நான் வெட்கப் படுகிறேன்.

2 comments:

  1. புலிகள் அமைப்பு முஸ்லிம்களை எப்பொழுது அழிக்க ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து அவர்களுக்கு அழிவு ஏற்படல்லாயிற்று.... முஸ்லிம்களை இவர்களும் அடக்க நினைத்தார்கலாயின் அழிந்து விடுவார்கள்.... இறைவனின் தண்டனை மிக விரைவில் இவர்களுக்கு கிடைக்கும்..... 2001ஆம் ஆண்டுக்கு பிறகுதான் அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாகப் பரவியது அது போலவே இலங்கையிலும் பொது பலசேனாவின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அவர்களுக்கு மாற்றமான எதிர் விளைவுகளையே ஏட்படுத்தும் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete

Powered by Blogger.