மீள்குடியேறிய மன்னார்-முசலி மக்களை விடாது தூரத்தும் துன்பம்
(எஸ்.எச்.எம்.வாஜித்)
மன்னார்-முசலி பிரதேசத்தில் நெல் அறுவடை ஆரம்பித்துவிட்ட போதிலும் விளைந்த நெல்லை நியாயமான விலைக்கு சந்தைப்படுத்த முடியமா? என்ற ஏக்கத்திலும் நெல்லுக்கு நல்ல விலை கிடைக்குமா? என்ற ஏகத்தில்; தத்தளித்து கொண்டிருக்கின்றோம் என மன்னார்-முசலி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தனியார் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதனால் தாங்கள் பெறும் நஷ்டத்திற்கு ஆளாக வேண்டி உள்ளது என முசலி விவசாயிகள் பலர் குறிப்பிடுகின்றனர்.
இன்னும் வாழ்கை செலவுகள் அதிகரித்தனால் விவசாய்ய தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டிருப்பதாகவும்இஏரி பொருள்களுக்கு விலையேற்றம் காரணமாக நெல் அறுவடை செய்கின்ற இயந்திரத்தின் கொடுப்பனவும் அதிகரித்துள்ளது.
ஆனால் இம்முறை மன்னார்-முசலி பிரதேசத்தில் நெல் விளைச்சலும் குறைவு. அறுவடை காலத்தில் விலையும் குறைவு அத்துடன் காலம் தப்பிய மழை காரணமாகவும், கடந்த மாதம் முசலி பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்த மழையினால் மணற்குளம், பண்டாரவெளி, இலந்தைகுளம்இசிலாவத்துறை, வெளிமலை, பொற்கேணி மற்றும் வேப்பங்குளம் பகுதிகள் அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்ட பிரதேசங்களாகும். முசலியில் உள்ள அதிகமான விவசாய அமைப்புகளுக்கு இன்னும் அழிவு நிவாரணங்கள் இன்னும் கிடைக்கப் பெற வில்லை என தெரிவித்தனர்.
எனவே தனியார் வியாபாரிகளுக்கு நெல்லை கொள்வனவு செய்யும் போது உத்தரவாத விலையினை நீர்ணையிக்க அரசாங்கமும்இமன்னார் மாவட்ட விவசாய திணைக்களமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார்-முசலி விவசாயிகள் தயவாய் வேண்டிகொள்கின்றனர்.
Post a Comment