Header Ads



பாராளுமன்றத்தில் முஸ்லிம் எம்.பி.களுக்கு இடையில் தர்க்கம், குழப்பம், கூச்சல்


(TL)

இஸ்லாத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள், இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில்  அரச எதிர்க்கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள் வியாழக்கிழமை (07-02-2013) தங்களுக்குள் மோதிக் கொண்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை உரையாற்றியிருந்த ரணில் விக்கிரமசிங்க இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் உரையாற்றியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கான பதிலை அரசு சார்பில் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07-02-2013) சில்வா வழங்கினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுகளை ஒட்டுமொத்தமாக நிராகரித்த அமைச்சர் அவ்வாறு இஸ்லாம் மதத்தினருக்கு எதிராக நடந்ததாகக் கூறும் சம்பவங்களை நிரூபிக்க முடியுமாவெனவும் சவால் விடுத்தார். அமைச்சரின் உரையை பிரதியமைச்சர் காதர், ஏ.எச்.எம்.அஸ்வர் போன்றோர் மேசைகளில் தட்டி வரவேற்றனர்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஐ.தே.க. எம்.பி. கபீர் ஹாசிம் அரச தரப்பில்  உள்ள முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள்  செய்ய வேண்டிய வேலையை எதிர்க்கட்சித் தலைவர் செய்துள்ளார். அவருக்கு இருக்கும் தைரியமும்  தேர்தல்கள் தொடர்பான அக்கறையும் அரசில் உள்ள முஸ்லிம் அமைச்சர்களுக்குக் கிடையாது என ஆவேசமாகக் கூறினார்.

இதற்கிடையில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அரச தரப்பு எம்.பி.யான ஏ.எச்.எம்.அஸ்வர் ரணிலுக்கு எதிராக கருத்துகளை முன்வைக்க முயன்ற போது அது ஒழுங்குப் பிரச்சினையல்லவென பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியால் நிராகரிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் அரச தரப்பு முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்களை கபீர் ஹாசிம் எம்.பி. கடுமையாக சாடினார். இதனால் பிரதியமைச்சர் அப்துல் காதர், அஸ்வர் போன்றோர் கபீர் ஹாசிம் எம்.பி.யுடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் பெரும் கூச்சல் எழுந்தது.

இதன் போது நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய போதும் கூச்சல்களினால் சிறிது நேரம் கழித்தே அவரால் தன் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைக்க முடிந்தது.

2 comments:

  1. Jaffnamuslim உறுப்பினர்களே!,என் அன்பான முஸ்லிம் சகோதரர்களே! எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது அதாவது,பாராளமன்றத்தில் முஸ்லிம் எம்பிக்கள் (உறுப்பினர்கள்) உண்டா என்பதே நாம் முஸ்லிம் காங்கிரஸாக இருந்த காலத்தில் ர.ஹகீம் அவர்களிடத்தில் இஸ்லாமும் இருந்தது,இஸ்லாமிய பற்றும் இருந்தது ஆனால் அன்று தொட்டு இன்று வரை இந்த காதர்,அஸ்வர்,அலவி போன்றோரிடம் இருக்கவே இல்லை என்பதை பல ஆதாரமான செய்திகளை கொண்டு கூறக்கூடியதாக இருந்தது, இருக்கறது அல்லாஹ் தான் அவர்களுடைய ஈமானை புணர்நிர்மாணம் செய்யனும்.

    ReplyDelete
  2. இந்த வயசாளிகள் இரண்டு பேருக்கும் அல்லாஹ் ஹிதாயத்த கொடு......

    ReplyDelete

Powered by Blogger.