முஸ்லிம்களை நாம் ஒரு போதும் கைவிடப்போவதில்லை - சம்பந்தன்
(எம்.ஏ.எம்.நிலாம்) தமிழர்களும் முஸ்லிம்களும் பிரிந்து நின்று எமது பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு தேடிக்கொள்ள முடியாது. எமக்கிடையேயான நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். தெளிவான விளக்கம் இருப்பது அவசியமானதெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முஸ்லிம்களை நாம் ஒரு போதும் கைவிடப்போவதில்லை. அவர்களுக்கு தீங்கு ஏற்படும் வகையில் ஒரு போதும் செயற்படப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
இன்றைய காலகட்டம் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் மிக ஆழமாகச் சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டிய முக்கிய தருணமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டில் சகல இன மக்களும் சமாதானமாக சமத்துவமாக சந்தோஷமாக சம உரிமையுடன் வாழவேண்டும். அதற்குத் தடைகள் ஏற்படுத்தப்படுமானால் அதனை ஒன்றுபட்டு தடுத்து நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் சம்பந்தன் உறுதிபடத் தெரிவித்தார்.
முதுபெரும் முஸ்லிம் தலைவரும், முன்னாள் தமிழரசுக் கட்சி செனட்சபை உறுப்பினரும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான அல்ஹாஜ் மசூர் மௌலானாவின் அகவை 80 நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் கொழும்பு வாழ் மருதமுனை மக்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வைபவத்தில் தமிழ்,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,அரசியல் பிரமுகர்கள், தமிழ்,முஸ்லிம் ஆர்வலர்கள், பொது மக்கள் என பெரும் எண்ணிக்கையினர் கலந்து கொண்டனர்.
kalattin theyvai MR sampatta averkalin karuttai namatu samuha talaiverkalum aresiyalvatikalum,kavenattil edukkevayndum.puttalam pallivayalil phunthu muslimkalai suddu kolai seite potu MR AMIRTELINKAM kandena arikkai viddetum ninaivil kollaveyndiya onrahum.
ReplyDeleteஒரு முறை தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவராக இருந்த மு.சிவசிதம்பரம் ஐயா அவர்கள் பாராளுமன்றத்தில் ...சபதம் ஒன்றை வெளியிட்டார் .....புத்தளத்தில் உள்ள அனைத்து அகதி முஸ்லிம்களும் என்று திரும்பவும் தமது தாயகத்துக்குப் போ ய் சேர்வார்களோ !!!..அன்றுதான் நான் யாழ்பாணத்துக்கு காலடி எடுத்த்து வைப்பேன் என்றார் ......அப்படி எனது கண் மறையும் முன் அவர்கள் போகாவிட்டால் ....???????எனது சவம் தான் அங்கு போய் சேரும் என்றார் ......கடைசியில் அவர சொன்னபடி .. சவம்தான் போய் சேர்ந்தது ....
ReplyDelete