இலங்கை பாராளுமன்ற எம்.பி.க்கள் குழு லண்டன் செல்கிறது
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
முதற் தரமாக இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பல கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும்,மற்றும் அரசியல் பிரதி நிதிகளையும் கொண்ட குழுவொன்று இம்மாதம் 24 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஜக்கிய ராஜ்யத்திற்கான விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
இலங்கையில் யுத்ததிற்கு பின்பு நல்லிணக்கத்தை காண்பதற்கு தடையாகவுள்ள காரணிகள் தொடர்பாக ஜக்கிய ராஜ்யத்தில் உள்ள புலம் பெயர் மக்களை சந்தித்து இக்குழுவினர் கலந்துரையாடவுள்ளனர்.
இந்த குழுவில் லங்கா சுதந்திரக்கட்சிய்ன பாராளுமன்ற உறுப்பினர்களான வசந்த சேனாநயக்க.ஷேஹான் சேமசிங்க,அகில் இலங்கை மஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பிர்களான ஹரின் பெர்ணான்டோ,நிரோஷன் பெரேரா.தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதி நிதித்துவப்படுத்தி சேர்ந்த ரகு பாலச்சந்திரன் ஆகியோர் இவ்விஜயத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ரோயல் பொது நலவாய சங்கம்,இண்டநேஷனல் அலட்.வன்டெக்ஸ் இனிசியேட்டிவ் ஆகிய 3 அமைப்புக்கள் கூட்டாக விடுத்த அழைப்பின் பேரிலேயே இக்குழுவினர் அங்கு செல்கின்றனர்.
இவ் விஜயத்தினை மேற்கொள்ளும் இ.லங்கை பிரதி நிதிகள் பல்வேறுபட்ட தமிழ்,முஸ்லிம்,சிங்கள புலம் பெயர் இன.மத அமைப்பு சார்ந்த பிரதி நிதிகளை சந்தித்து கலந்துரையடவுள்ளனர். இக்குழுவினர் எதிர் வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment