பொதுபல சேனாவின் அடுத்த இலக்கு கிறிஸ்தவர்கள் - மர்சூக் அகமது லெவ்வை
பொதுபல சேனா அமைப்பின் இலக்கு தற்போது முஸ்லிம்கள். அடுத்தது கிறிஸ்தவர்கள் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் மர்சூக் அகமது லெவ்வை தெரிவித்தார்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் மறைமாவட்ட ஆயராக கடமையாற்றி தற்போது திருகோணமலை மறைமாவட்டத்திற்கு ஆயராக கடமையாற்றும் கலாநிதி பொன்னையா ஜோசப்பின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ;
இந்த நாட்டில் முஸ்லிம்களை இலக்கு வைத்து இயங்கம் பொதுபல சேனா எனப்படும் பௌத்த அமைப்பு “தன் அடுத்த இலக்காக கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டுள்ளது என்பதை அண்மையில் அந்த அமைப்பினால் மகரகமவில் கூட்டப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை வைத்து தெரிந்து கொள்ளமுடிகின்றது.
இதனால் இந்த நாட்டிலுள்ள சிறுபான்மைச் சமூகங்கள் இந்த அமைப்பின் செயற்பாடுகளை நன்கு விளங்கிக் கொள்ளல் வேண்டும். இந்தியாவில் சிவசேனை அமைப்பு எவ்வாறு மதவாதத்தைத் தூண்டி செயற்படுகின்றதோ அதே போன்று இலங்கையில் இந்த பொது பல சேனா அமைப்பு மதவாதத்தை தூண்டிச் செயற்படுகிறது.
இலங்கையில் கடந்த முப்பது வருடங்களின் பின் ஏற்பட்டுள்ள சமாதானம் நிரந்தர சமாதானமாக மாறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மதவாதத்தைத் தூண்டி இலங்கையில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டை பிரச்சினையாக்குவதற்கு இந்த பொது பல சேனா அமைப்பு முற்படுகின்றது. இந்த பொது பல சேனா போன்ற மதவாதத்தைத் தூண்டும் அமைப்புகளுக்கு எதிராக சிறுபான்மைச் சமூகங்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார் .
இந்த வைபவத்தில் சம்மேளனத்தின் செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட சமாதானத்திற்கான சமயங்களின் பேரவையின் தலைவருமான மௌலவி அப்துல் காதர் உட்பட சம்மேளனப் பிரமுகர்கள் உலமாக்கள் மட்டக்களப்பு மாவட்ட சமாதானத்திற்கான சமயங்களின் பேரவையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சிறப்புரையை மௌலவி எம். எச். எம். புகாரி நிகழ்த்தினார்.
மர்சூக் அண்ணா ...ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ........
ReplyDeleteகொஞ்சம் எட்டி ஹிஸ்புக் கிட்டையும் பசிருக் கிட்டையும் சொல்லுங்கோ;
நாட்டில பொது பல சேனா என்றொரு அமைப்பு இருக்கெண்டு!
ரொம்ப புண்ணியம் கிடைக்கும்.
கிணற்றுத் தவளை என்பதா? கூழ் முட்டை என்பதா? வாசகர்களே உங்கள் தீர்ப்பு...
ReplyDelete