Header Ads



புனிதமான இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை - கேள்வி கேட்க கொழும்பு வாருங்கள் - இந்தியாவில் ஜனாதிபதி மஹிந்த



இந்தியப் பயணத்துக்கு கிளம்பியுள்ள கடுமையான எதிர்ப்புக் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தன்னிடம் கேள்விகளை எழுப்புவதற்கு கொழும்புக்கு வருமாறு கூறி விட்டு நழுவியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. 

இன்று பகல் சிறப்பு விமானம் மூலம் தனது மனைவி, இரு மகன்கள், உறவினர்கள், அதிகாரிகளுடன் புத்த கயா வந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காபோதியில் வழிபாடுகளை நடத்தினார். 

அதன் பின்னர், அவரை அணுகிய செய்தியாளர்கள், இந்தப் பயணத்துக்கு இந்தியாவில் கிளம்பியுள்ள கடுமையான எதிர்ப்புக் குறித்து கேள்வி எழுப்பினர். 

அதற்கு அவர், புனிதமான இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்றும் தன்னிடம் கேள்வி எழுப்புவதற்கு கொழும்புக்கு வருமாறும் கூறிவிட்டு நழுவிக் கொண்டார் மகிந்த ராஜபக்ச. 

முன்னதாக, மகாபோதி ஆலயத்துக்குள் நுழைந்தபோது, சிஜனாதிபதி மகிந்த ராஜபக்சக்கு எதிராக அங்கு திரண்டிருந்தவர்கள் கண்டனக்குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.