Header Ads



மணவாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் சரி...!



(பிச்சைத் தம்பி கஸீர் - அல்அஸ்ஹர் பல்கலைக்கழகம்)

மணவாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் சரி வாப்பா எதற்காக பென்சிலும் ,கொப்பியும் ,அழி இர்ப்பரும் ....?

ஒரு தந்தை தனது மகனுக்கு மணமுடித்து கொடுத்தபின்  அவன் வீட்டுக்குச் சென்று உனக்கு அல்லாஹ் அருள் புரியட்டும் என்ற வாழ்த்துச் சேதியை கூறினார். பின்பு அவன் அருகாமையில் உட்கார்ந்து ஒரு பேனாவும் ஒரு காகிதமும் கொண்டு வரும்படி தனது மகனுக்கு கூறினார்.

 மகன் :திருமணத்துக்கு தேவையான் அனைத்தையும் வாங்கிவிட்டேன் தந்தையே. பேனாவும் கொப்பியும் எதற்காக என்று வினா எழுப்பினான் .?

 தந்தை : மகனை நோக்கி உடனே பேனாவும் ,கொப்பியும் ,ஒரு அழிப்பான் (eraser) வாங்கிகிட்டு வா என்று கூறினார் .மகன் ஆச்சரியத்தோடு கடைக்குச் சென்று தந்தை கூறிய மூன்றையும் வாங்கி தந்தையிடம் கொடுத்துவிட்டு அவருக்கு அருகாமயில் அமர்ந்தான் .

 தந்தை : நீ எழுது .

 மகன் :நான் என்ன எழுத ? .

 தந்தை :நீ விரும்புவதை எழுது .

 மகன் :ஒரு வசனத்தை எழுதினான் .

 தந்தை: அதை அழித்துவிடு என்று அவனிடம் கூறினார் ,அவனும் அதை அளித்துவிட்டான் .

 தந்தை : மீண்டும் நீ விரும்பியதை எழுது என்று கூறினார் .

 மகன் :அல்லாஹ்வின் மீது ஆணையாக எனது தந்தையே என்னிடமிருந்து நீங்கள் எதிர் பார்ப்பது என்ன என்று மகன் வினா தொடுத்தான் .

 தந்தை : அவனுக்கு பதிலளித்தார் நீ எழுது என்று .

 ஆகவே மகன் எழுதினான் .

 அவனிடம் கூறினார் அதை அழித்துவிடு என்று அவனும் அதை தந்தை கூறிய படியே எழுதியதை அழித்துவிட்டான் .

 மீண்டும் நீ எழுது என்று அவனிடத்தில் அவர் கூறினார் ;

 மகன் :அழ்ழாஹ் வுக்காக கேட்கிறேன் நீங்க எனக்கு சொல்லுங்கள் இது எதற்க்காக ..?

 அவன் கேள்விக்கு கிடைத்த பதில் ஒன்றுதான் நீ எழுது என்பதுதான் அவனும் எழுதினான் .அதனை அழி என்று சொல்ல அதனை அழித்துவிட்டான் .

 பின்பு அவனின் இரு தோல் புயத்தையும் பிடித்த வண்ணம் அவனைப் பார்த்து இப்படிக் கூறினார் .

 தந்தை :என் அருமை மகனே மணவாழ்வு என்பது இப்படி பல விடயங்களைஅழித்துதான் அதற்கு உரம் ஊட்டவேண்டியுள்ளது. நீ உன் மண வாழ்கையில் உன் மனைவிக்கு விருப்பம் இல்லாத அம்சங்களை உன்னிலிருந்து முற்றாக அழிக்க வேண்டும் . அது போல ஒரு மனைவி அவளின் மண வாழ்வில் தனது கணவனுக்கு பிடிக்காத அம்சங்களை அவளிலிருந்து முற்றாக அழிக்க வேண்டும் .

 மண வாழ்க்கை முடிந்த பிறகு சிலர் அல்பத்தில் வாழ்கிறார்கள் நிஜ வாழ்கையில் கேள்விக் குறிதான் ..(?)

அப்படி இல்லாவிட்டால் மணவாழ்வு எனும் பக்கத்தில் கருமை எனும் பனித்துளிதான் படிந்திருக்கும் .

 அல்லாஹ் எம் அனைவருக்கும் சிறந்த மணவாழ்க்கையை இவ்வுலகில் தந்து அதன் நாம் மூலம் ஈருலகிலும் வெற்றி பெற அருள் செயவ்னாக . 


..

1 comment:

  1. உண்மையான விடயம் அனைவரையும் ஒறு அழகிய ஒரு தந்தை,மகன் உரையாடலில் கணவன்,மனைவி உறவை வெளிப்படித்திய எனது நண்பன் கஸீருக்கு இன்னும் நல்ல இது போன்ற அழகிய வரிகளை எழுதவுதற்கு இறவன் அருள் புரிவானாக முக்கியமாக ஜப்னா முஸ்லீம் இணையதலத்திற்கு

    ReplyDelete

Powered by Blogger.