Header Ads



மாத்தளை வைத்தியசாலை மனிதப் புதைகுழியை மூடுமுடியாது - நீதிமன்றம் உத்தரவு




(ஜே.எம்.ஹபீஸ்)

மாத்தளை வைத்தியசாலை வளவில் உள்ள மனிதப் புதைகுழியை மூடுவதற்கு பொலீஸார் கேட்ட அனுமதிக்கு மாத்தளை மாஜித்திரேட் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட வைத்திய சாலை வளவில் கட்டிடம் ஒன்று அமைப்பதற்குத் தொண்டப்பட்ட வேளை மனித எழும்புக் கூடுகளும் மண்டை ஓடுகளும கண்டு பிடிக்கப்பட்டன. இவ்வாறு மொத்தம் 155 மனித உடற்பாகங்கள் இது வரை கண்டு பிடிக்கப்பட்டு அவை பகுப்பாய்வு அறிக்கைக் காக அனுப்பட்டுள்ளன.

எனவே மேற்கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளதால் அதனை மூட முடியாது என்றும் அவ்விடத்தில் பொலீஸ்காவல் பலப் படுத்தப்படவேண்டும் என்றும் மாத்தளை நீதவான் சத்துரிகா டி சில்வா தமது உத்தரவின் போது தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.