செவ்வாய் கிரக பாறையை வெட்டி எடுத்தது "கியூரியாசிட்டி'
செவ்வாய் கிரகத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள "கியூரியாசிட்டி' ரோவர் ஆய்வுக்கலம், முதல் முறையாக பாறையை வெட்டி எடுத்து சேகரித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல், தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளிட்டவை குறித்த ஆய்வில் "கியூரியாசிட்டி' ஆய்வுக்கலம் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், ஈரப்பதம் இருப்பதற்கான தடயம் கிடைத்த, ஜான் கிளெய்ன் பெயரிடப்பட்ட வண்டல் படிவுப் பாறையைத் துளையிட்ட "கியூரியாசிட்டி' அதிலிருந்து கல்லை வெட்டி எடுத்து ஆய்வுக்கான மாதிரியை சேகரித்துள்ளது.
பூமி தவிர வெளி கிரகத்தில் முதன்முறையாக பாறை வெட்டி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.
வெட்டி எடுக்கப்பட்ட பாறை மாதிரி துகள் செய்யப்பட்டு, "கியூரியாசிட்டி' ஆய்வுக்கலத்திலேயே பரிசோதனை நடத்தப்படும். அந்த ஆய்வுப் பணிகளை அமெரிக்காவின் நாசா மையத்தில் இருந்தபடியே விஞ்ஞானிகள் மேற்கொள்வர்.
கலிபோர்னியா மாகாணத்தின் பாசடானாவில் உள்ள நாசா ஆய்வக விஞ்ஞானி மெக்ளோவ்ஸ்கி கூறுகையில், ""இந்த நாளுக்காகத்தான், இத்தனை ஆண்டுகள் உழைத்துக் காத்திருந்தோம்'' என்றார்.
Post a Comment