பாராளுமன்றத்தில் பச்சை பொய் சொன்ன அமைச்சர் நிமால சிறிபால சில்வா
முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரால் நிரூபிக்க முடியாமல் போனதன் மூலம் அவ்வாறான எந்தவொரு சம்பவமும் நிகழவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த விசேட கூற்றுக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறியதாவது;
கடந்த பாராளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவர் 10 பள்ளி வாசல்களுக்கு மேல் தாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அது தொடர்பில் நான் வழங்கிய பதிலில் அதனை விபரங்களைத் தந்து நிரூபிக்க முடியுமா என சவால் விடுத்தேன்.
எனது சவாலை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, இன்று இங்கு வந்து ஒரு பத்திரிகையில் வெளிவந்த செய்தியொன்றை ஆதாரமாகக் காட்டுகின்றார். பத்திரிகை ஒன்றில் வெளிவந்தவை கற்பனைச் செய்திகளும் பொய்ச் செய்திகளுமே. இதனை பொலிஸ் மா அதிபர் எமக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
இப்பத்திரிகையில் வெளிவந்த இங்கிருவத்த பள்ளிவாசல் சம்பவம், அம்பன்பொல பள்ளிவாசல் சம்பவம் போன்றவை பொய்யான செய்திகள் என்பதை வலியுறுத்துகிறேன்.
சில ஊடகங்கள் சிறிய விடயங்களைக் கூட பூதாகாரமாக்கி செய்திகளை வெளியிடுகின்றன. இன, மதவாதங்களைத் தூண்டுவதே இவற்றின் நோக்கம். இன, மதவாதத்தை நாட்டில் தூண்டிவிட்டு அரசுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த, அதற்குள் தள்ளிவிட சில தீய சக்திகள் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.
ஹலால் உணவு வகைகளைப் பகிஷ்கரிப்பது தொடர்பிலும் மற்றும்சில சம்பவங்கள் தொடர்பிலும் வதுரம்ப, நவகமுவ, அளுத்கம, பதுளை, பயாகல, குருணாகல் போன்ற நகரங்களில் சிறிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளனர்
முஸ்லிம் அமைச்சர்களே....! இந்த ராஜபக்க அன் கம்பனி உங்களையும் இந்த முஸ்லிம் உம்மாவையும் அவமானப்படுத்தியது போதும்... உங்களது சுக போக வாழ்க்கைக்காக இந்த கண்ணியமான இஸ்லாத்தையும் அதை பின்பற்றும் முஸ்லிம்களின் தன்மானத்தையும் கெளரவத்தையும் விற்று விடாதீர்கள். அவருக்கும் அவரது கம்பனிக்கும் உங்களது பலமான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவியுங்கள்.
ReplyDeleteiwar oru sila warudangalaha kannai moodik kondu irukkiraro theiya willai!
ReplyDelete