மூத்த இலக்கியவாதி கலாபூசனம் எஸ்.ஏ.மீராசாஹிப் மரணம்
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
கல்குடாத் தொகுதியின் மூத்த இலக்கியவாதியும் பிரதேச மக்களால் 'பாட்டுக்கார மீராசாஹிப்' என்றழைக்கப்படுபவருமான கலாபூசனம் எஸ்.ஏ.மீராசாஹிப் (21.02.2013) பிற்பகல் 04.00 மணியளவில் தனது 87வது வயதில் மரணமடைந்துள்ளார்.

வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை கிராமத்தில் முஹம்மதியா குர்ஆன் கலாசாலையை உருவாக்கி முப்பது வருடங்களுக்கும் மேலாக பிரதேச சிறுவர்களுக்கு மார்க்கக் கல்வியைப் போதித்ததுடன் அம் மாணவர்களின் திறமைகளைக் கண்டு அவர்களை மேடைப் பேச்சாளர்களாகவும், இஸ்லாமியப் பாடகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் உருவாக்கிய பெருமைக்குரியவர் கலாபூசனம் எஸ்.ஏ.மீராசாஹிப் ஆகும்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட வானொலி மற்றும் மேடை நாடகங்களை எழுதி நடித்துள்ளதுடன் இவரது நாடகங்கள் தேசிய மட்டத்தில் பரிசில்களும் பெற்றுள்ளன ஐநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை ஏற்றி அவரே பாடியுள்ளார் சமகாலப் பிரச்சினைகளைப்பற்றி உடன் ஏற்றி பாடக்கூடிய வள்ளமையுடையவர்.
இவரது ஜனாஸா நாளை (22.02.2013) வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
Post a Comment