உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாதே - மன்னார் முஸ்லிம்களின் வேண்டுகோள்
(முசலியான் எஸ்.எச்.எம்.வாஜித்)
இந்த நாட்டில் உள்ள எல்லா பிரதேசங்களையும் விட சிறப்பு மிக்க பிரதேசமாக மன்னார்-முசலி பிரதேசம் அன்றிலிருந்து இன்று வரைக்கும் காணப்படுகின்றது. இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதட்கும் 5 தரை வழி பாதைகளை கொண்டு காணப்படுகின்றது.
1.அரிப்பு பாதை-சிலாவத்துரை (முசலி)
2.முருங்கன் பாதை-சிலாவத்துரை(முசலி)
3.இலவங்குளம் பாதை-சிலாவத்துரை(முசலி)
4.தந்திரிமலை பாதை-சிலாவத்துரை(முசலி)
5.ஓயாமடுவ பாதை-சிலாவத்துரை(முசலி)
இத்தனை போக்குவரத்து வசதிகள் இருந்தும் முசலி பிரதேசத்தில் அதிகமான கல்விமாண்கலையும் வைத்துக்கொண்டு இந்த முசலி பிரதேசம் இன்னும் பின்னடைந்தே செல்கின்றது இதற்கான காரணங்களை கண்டரியப்ப்படாமலே உள்ளது.ஆனாலும் அதிகமான முஸ்லிம்களை கொண்ட பிரதேசம் என்ற காரணத்தினாலும் அன்றிலிருந்து இன்று வரைக்கும் புரம்தள்ளப்பட்ட பிரதேசமாக காணப்படுகின்றது.எத்தனையோ பிரச்சினைகள் இருந்தும் அதனை புரம் தள்ளிவிட்டு குறிப்பிடப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த முசலியினை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கோடு இனம்,மதம்,குரோதம் காட்டாமல் அனைவருக்கும் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் பல வருடகாலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரைக்கும் செய்கின்றனர்.
ஆனாலும் அன்று LTTE யினர் ஆயுத முனையில் செய்த கொடூரங்கலையும்,அட்டூலியங்க்கலையும் இனங்களை முரண்பட செய்யும் வேலைகளை இன்று அவர்களின் எச்சங்க்களான சில குறிப்பிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்கள் ஆர்பாட்டங்கள் மூலமும் துண்டுப்பிரசுரம் மூலமும் பேனாவினாலும் இந்த இனம்,மதம் பாராமல் முசலி மக்களுக்கு சேவை செய்யும் அமைச்சர்களையும் பாரளுமன்ற உறுப்பினர்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்று பல்வேறு பட்ட செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பது யாவரும் அறிந்த உண்மை.
இந்த அமைச்சரினால் முசலியில் உள்ள தமிழ் சகோதர்களுக்கு செய்த சேவையினை யாராளும் பட்டியல் போட முடியாது.முசலியில் உள்ள தமிழ் கிராமங்களான அரிப்பு,கொக்குப்படையான்,மருதமடு.சவேரியார்புரம்,மற்றும் முள்ளிக்குளம் இன்னும் எத்தனையோ தமிழ் கிராமங்க்கள் உள்ளன.அந்த ஊர் மக்களிடம் சென்று கேட்டால் இந்த அமைச்சர் செய்த சேவையினை அந்த ஊரும் அந்த மக்களும் சொல்லுவார்கள்.தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு இம்மக்கள் வாக்களித்திருந்தாலும் இந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் முசலியில் உள்ள தமிழ் சகோதரர்களுக்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் எந்த விதமான உதவிகளையும் செய்வதில்லை என மக்கள் வேதனைப்படுகின்றனர்.
கடந்த முறை பெய்த சாதாரண மழையினால் மன்னார்-முசலிக்கான தரை வழிபாதை 14 நாட்களாக தடைப்பட்டது.அவ்வேலையிலும் முசலி தமிழ் சகோதரர்களுக்கு அமைச்சர்கள் பாரளுமன்ற உருப்பினர்கள் மற்றும் முசலி முஸ்லிம்களும் பல்வேறுபட்ட உதவிகளை செய்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உருப்பினர்களே முசலி மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் தமிழ் முஸ்லிம் உறவுகளையும் முசலியின் அபிவிருத்திக்கு முட்டுக்கடையாக இருக்க வேண்டாம்.
Post a Comment