Header Ads



''இது சிங்கள நாடு கவனமாக இருடா'' கண்டியில் இனவாதிகள் அட்டகாசம் (படங்கள்)



(இ. அம்மார்)

இது சிங்கள நாடு கவனமாக இருடா எனக் கொண்ட வாசகங்கள் அடங்கிய   கோசங்கள் பள்ளிவாசலகளின் மதில் சுவர்கள் மற்றும்  பள்ளிவாசல்களுக்கு முன் அமைந்துள்ள பொது தானங்களில் பச்சை மையினால் எழுதப்பட்டுள்ளதையும் கண்டியிலுள்ள அறிஞர் சித்திலெப்பை வீதிக்கு வித்தியார்த்த வீதி என மையினால் எழுதியுள்ளதையும் கண்டு   ஒரு பதற்றமான சூழ்நிலை இன்று காலைவேளையில் காணப்பட்டது

இந்த வாசகங்கள் கண்டியில் மீராமக்காம் ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு முன்ளாலும் சில பள்ளிவாசலுக்கு முன்னாலும்  காணப்பட்டன.

கண்டி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடடம் கண்டி ஜம்மியதுல் உலமா சபை இது சம்மந்தமாக முறைப்பாடு தெரிவித்துள்ளது அதனைத் தொடர்ந்து பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்  இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற் கொள்ள நடவடிக்கை  எடுக்கப்பபோவதாகவும் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.





No comments

Powered by Blogger.