முஸ்லிம்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க விடுதலை வாதிகளாக மாறவேணடும் - மாவை
தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இன்று முஸ்லிம் மக்களின் காணிகள் பறிக்கப்படுகின்றன. பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன.
ஹலால் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இவ்விடயங்களைப் பற்றிப் பேசுங்கள். உரிமைகளை வென்றெடுக்க விடுதலைவாதிகளாக மாறுங்கள். இவ்வாறு நாடாளுமன்றில் பேசும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,,
பொறுப்புடன் பதில் அளிக்க வேண்டிய அமைச்சர்கள் குறிப்பிட்ட விடயத்துக்கு அப்பால் பொறுப்பற்ற தன்மையில் பேசுவது எமக்குப் பெரும் வேதனையளிக்கின்றது. தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. நாம் முஸ்லிம் மக்களுடன் பேசவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் விருப்புடன் இருக்கின்றோம்.
இன்று முஸ்லிம் மக்களின் காணிகள் பறிக்கப்படுகின்றன, பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன, ஹலால் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இவ்விடயங்களைப் பற்றிப் பேசுங்கள். உங்கள் உரிமைகளை வென்றெடுக்க விடுதலை வாதியாக மாறவேண்டும். ஜனநாயகத்தை சிதைக்கும் இராணுவத்தின் அடாவடித்தனங்களை நியாயப்படுத்த முனைய வேண்டாம் என்றார்.
aadu nanaykirathenru onaai aluhinrathu!
ReplyDelete