Header Ads



உலகிலேயே மிக உயரமான கட்டிடம் சவூதி அரேபியாவில்..!


உலகிலேயே மிக உயரமான கட்டிடம் சவூதி அரேபியாவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. 

இக் கட்டிட நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள லண்டனைத் தளமாகக் கொண்ட மாஸ் நிறுவனத்துடன் பிரிட்டனின் ஈசி ஹரிஸ் நிறுவனமும் இணைந்து தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

லண்டனின் ஸாராட் கோபுரத்தையொத்த வகையிலே, ஜகார்த்தாவிலே கிங்டன் எனும் கோபுரம் வடிவமைக்கப்படவுள்ளது. ஆனால், ஸாராட் கோபுரத்தின் உயரத்தை விட 3 மடங்கு உயரமான 3280 அடி உயரத்திலே நிர்மாணிக்கப்படவுள்ளது. தற்போது மிக உயரமான கோபுரமாகவுள்ள டுபாயின் புர்ஜ் கலீபாவை விட 558 அடி உயரம்  கூடியதாக இக் கட்டிடம் அமையும். 

780 மில்லியன் பவுண்ஸ் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள கோபுரம் கட்டி முடிக்க 5 வருடங்களுக்கு மேலாகுமென எதிர்பார்க்கப்படுவதுடன் இக் கோபுர உச்சியிலிருந்து செங்கடலையும் பார்க்கக் கூடியதாக இருக்குமெனவும் கூறப்படுகின்றது.

1 comment:

  1. மறுமையை வரவேற்கும் உயர் கட்டிடங்களும், பம்மாத்துகளும்.

    ReplyDelete

Powered by Blogger.