பாராளுமன்றத்தில் அசடு வழிந்த அமைச்சர்
(Tm) போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம மீண்டுமொருமுறை நாடாளுமன்றத்தில் தகாத வார்த்தைகளை பிரயோகித்து தர்ம சங்கடத்தில் சிக்கிக்கொண்டார். நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் ஆபாசமான வார்த்தைகளை நாடாளுமன்றினுள் பிரயோகித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரனவின் கேள்விக்கு பதிலளிக்கையில் “நீங்கள் எனது பிரதான மனைவியின் கிராமத்திலிருந்து வந்தவர். ஆகையினால் கண்டிப்பாக உங்களது கேள்விக்கு பதிலளிப்பேன். இவ்விடயத்தினை பொது இடத்தில் கதைப்பதற்கு நான் வெட்கப்படவில்லை” என்று குமார வெல்கம - நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரை உசுப்பேற்றி இப்படியான தகாத வார்த்தைகளை வரவழைத்து களிப்படைய எத்தணித்தனர்.
இருந்தபோதிலும், சுதாகரித்துக்கொண்ட அமைச்சர் குமார வெல்கம - பொதுமக்கள் கலரியில் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் இருப்பதைக் கண்டு தர்மசங்கடத்திற்குள்ளாகி, “இதை நான் முதலில் கண்டிருந்தால் இப்படியான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்திருப்பேன்” என்று கூறினார்.
“உங்களது வார்த்தைப் பிரயோகங்களை அவதானமாக பயன்படுத்துங்கள்” என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டபோதே, அமைச்சர் பொதுமக்கள் கலரியை பார்த்து அசடு வழிந்தமை குறிப்பிடத்தக்கது.
குப்பை மேட்டில் இருப்பவனை மகுடம் ஏற்றியதன் விளைவு!
ReplyDelete