Header Ads



சவூதி அரேபியாவுக்கு போதைப்பொருளை கடத்த முயன்ற ஜோர்டானியருக்கு மரணதண்டனை

ஜோர்டான் நாட்டை சேர்ந்த, பரிஸ் சல்மான் சலமா அல் மக்ரேபி என்பவர் தடைசெய்யப்பட்ட ’அம்பெட்டாமைன்’ என்ற போதைப்பொருளை பெருமளவில் கடத்த முயன்ற வழக்கில், சவூதியில் கைது செய்யப்பட்டார்ன். பின்னர் அவர் கடத்திலில் ஈடுபட்டது அங்கு ஊர்சிதப்படுத்தப்பட்டது.   

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு, வடக்கு ஜாப் மாகாணத்தில், அவனது தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த வருடம், இதுவரை 16 பேர் தலை வெட்டப்பட்டுள்ளனர். கடந்த வருடம் மட்டும் 76 சிரச்சேதம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சவூதி அரேபியாவில் இஸ்லாமிய ஷரியா சட்டப்படி, கற்பழிப்பு, கொலை, மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றுக்கு தலைதுண்டிப்பு செய்யப்படுகிறது. 

No comments

Powered by Blogger.