Header Ads



இலங்கையை கைவிட்டது இந்தியா...!



ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு  எதிரான தீர்மான விடயத்தில், கடந்தமுறை போன்றே இந்தியா இம்முறையும் செயற்படும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தம்மிடம் வாக்குறுதி அளித்துள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். 

புதுடெல்லியில் இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்து நீண்டநேநரம் கலந்துரையாடியது. 

போரின் போது மனிதஉரிமை மீறல்களைப் புரிந்த இலங்கை அரசுக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை மேற்கு நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் ஆதரிக்க வேண்டும் என்று, இந்தக் குழுவினர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வலியுறுத்தினர். 

இந்தச் சந்திப்பை முடித்து வெளியே வந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மான விடயத்தில் இந்தியா கடந்தமுறை எந்த நிலைப்பாட்டை எடுத்ததோ அதே நிலைப்பாட்டையே இம்முறையும் கடைப்பிடிக்கும் என்று உறுதியளித்ததாக தெரிவித்தார். 

இந்தச் சந்திப்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எஸ்.வி.சித்தன், எம்.கிருஸ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, ஜே.எம்.ஹரூன், எஸ்.எஸ்.ராமசுப்பு, பி.விஸ்வநாதன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

2 comments:

  1. முஸ்லிம்களை கஷ்டத்துக்கும் அவமானத்துக்கும் உட்படுத்திய ராஜபக்கச அன் கம்பெனிக்கு இனி சீரழிவுதான்... இறைவா இவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் அகற்றிவிடுவாயாக... ஆமின்.

    ReplyDelete
  2. ஆனால் நாம் கைவிட மாட்டோம். புதுத்தொப்பியும் புதுச்சாரமும் அணிந்து உள்நாட்டு விவகாரத்தில் சைத்தானின் கையாள் அமெரிக்கா தலையிடாதே, யூத கையாளான ஐ.நா தலையிடாதே, வெள்ளைப்புலி நோர்வே தலையிடாதே என வக்காலத்து வாங்குவோம். பின்னர் இதற்கெல்லாம் பரிசு மசூதி உடைப்பா என ஒப்பாரி வைப்போம்! பின்னர் அல்லாஹ் இவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கு என அல்லாஹ்வுக்கும் மஹிந்தாவுக்கும் டபுள் கேம் ஆடுவோம்!

    ReplyDelete

Powered by Blogger.