சவுதி அரேபியாவில் அமெரிக்காவின் இரகசிய தளம்
சவுதி அரேபியாவில் அமெரிக்க உளவு அமைப்பான சி ஐ ஏ ஒரு ரகசிய தளத்தை இயக்கி வருவது இப்போது தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா, ட்ரோன் எனப்படும் தனது ஆளில்லா வேவு விமானங்களை இயக்கவென்றே சவுதி அரேபியாவில் கடந்த இரு ஆண்டுகளுக்காக ஒரு ரகசிய தளத்தை சி ஐ ஏ இயக்கி வருகிறது.
இந்த வசதி குறித்து அமெரிக்க ஊடகங்களுக்குத் தெரியும் என்றாலும், இது குறித்து அவை இதுவரை செய்தி வெளியிடவில்லை.
ஏமனில் இருக்கும் அல் கையீதா உறுப்பினர்களை தாக்கிக் கொல்வதற்காக இந்த தளம் அமைக்கப்பட்டது.
இங்கிருந்து இயக்கப்பட்ட ஒரு ஆளில்லா வேவு விமானம் ஏமனில் இருந்த மதகுரு அன்வர் அல் அவ்லகியை 2011 இல் கொன்றது.
அமெரிக்காவில் பிறந்த இவர், அரவு வளைகுடாவில் அல் கையீதாவின் ஏமன் கிளையின் வெளித் தாக்குதல்களுக்கான பொறுப்பாக இருந்தார்.
அமெரிக்காவால் சவுதி அரேபியாவிலிருந்து இயக்கப்பட்டு வரும் இந்தத் தளம் எங்கேயிருக்கிறது என்பது குறித்த தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. bbc
ரிஸானா விடயத்தில் கொக்கரித்தவர்களுக்கு இது தான் சந்தர்ப்பமும்,தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய தருணமும் இது தான் இன்றைய இஸ்லாமிய நாடுகளின் பலவீனம் இதற்காக உலக முஸ்லிம்கள் ஒன்று படுவதும்,இப்படியான கூட“டிக்கொடுப்புகளுக்கும்,காட்டிக்கொடுப்புகளுக்குமெதிராக உலக முஸ்லிம்களே வாருங்கள் ஒன்று படுவோம்,எதிரிகளை புறமுகமிட வைப்போம்,அல் அஸ்ஹர் பல்கலைக்கழக தலைவர் அஹமட் அல் தையிப்( http://www.jaffnamuslim.com/2013/02/blog-post_231.html) ஈரான் ஜனாதிபதிக்கு கூறியது போன்று எம்முடைய எல்லா எதிரிகளுக்கும் கூறுவோம்,(இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு கூறவைப்போம்).
ReplyDeleteசவூதி அரேபியாவில் அமெரிக்க ரகசிய தளம் .........என்று சொல்வதைவிட சவூதி முழுவதுமே ..! இரகசிய தளம்தான் ...என்று சொல்வது பொருத்தம் ...
ReplyDelete