Header Ads



பொறுப்புடன் நடந்தால் பல அநாவசிய பிரச்சினைகளை தவிர்க்கலாம் - ஜனாதிபதி மஹிந்த


எங்கள் நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும், இன ரீதியிலான நல்லிணக்கப்பாட்டையும் மதங்களுக்கிடையிலான நல்லுறவையும் வளர்க்கும் ஒரு பெரும் பொறுப்பு இருக்கிறது. இவ்விதம் ஒவ்வொரு பிரஜையும் நடந்துகொண்டால் பல அநாவசியமான பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

எஹலிய கொட தொகுதியில் கீனகஹவில என்னும் இடத்திலுள்ள ஸ்ரீ ஆனந்த ராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாது கோபுரத்தை திறந்து வைத்து பேசுகையில் கூறினார்.

மக்களிடையே இன, மத பேதமின்றி நல்லுறவை ஏற்படுத்துவதற்கு எதிராக இருந்த சகல வேற்றுமைகளையும் நாம் தூக்கியெறிந்து விட வேண்டிய காலம் இன்று உருவாகியிருக்கிறது என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், 22 வயதாகும் வரை நம் நாட்டு மாணவ மாணவியர் முஸ்லிம், தமிழ், மற்றும் சிங்கள பாடசாலைகளில் தனித்தனியாகவே கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 22 வயதுக்குப் பின்னரே அவர்களுக்கு இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்று நாம் கூறுகிறோம் என்றும் அவர் சொன்னார். தினகரன்

1 comment:

  1. இது போன்ற உபதேசங்களை உங்கள் மனதில் உங்களுக்கே சொல்லிகொண்டு செயலிலும் காட்டவும் அத்துடன் பொதுபலசேன போன்ற பயங்கரவாத குளுக்களுக்கும் எடுத்துரைப்பது மிகவும் பயனுள்ளதாய் அமையும், எல்லோராலும் திறமையாகவும் நல்லவர்களாகவும் பேசலாம் நடைமுறையில் கொண்டுவருவது சிலராலதான் முடியும்... என்னவே, நாம் கொஞ்சகாலம்தான் இவ்வுலகில் வாழப்போகின்றோம் என்ற எண்ணம் மட்டும் யார் மனதில் வருமோ அவர் கண்டிப்பாக நல்லதை செய்ய எத்தனிப்பார், அதற்குள் நல்லதை செய்வோம் என்று எண்ணிலால் தானாகவே நல்லது நடக்கும்...

    ReplyDelete

Powered by Blogger.