இலங்கை + முஸ்லிம் நாடுகள் குறித்து நவநீதம் பிள்ளையின் உரை
இலங்கையில் போரின்போது பாரிய மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெனிவாவில், 25-02-2013 தொடங்கிய ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வில், நிகழ்த்திய ஆரம்ப உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பல்வேறு நாடுகளிலும் இடம்பெற்ற மோசமான குற்றங்கள், மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்களும், கட்டளையிட்டவர்களும் நீதியில் இருந்து தப்பியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
நூறாயிரக்கணக்கான மக்கள் இறந்த ருவாண்டாவில் இரண்டு இனப்படுகொலைகள், பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, இன்னமும் ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனப் பகுதிகள், பாரிய மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்ற ஈராக் மற்றும் இலங்கை ஆப்கானிஸ்தானில் இன்னமும் தொடருகின்ற போர்க்குற்றங்கள், கொங்கோ ஜனநாயக குடியரசு, மாலி, சூடான, சிரியா போன்ற நாடுகளில் மனிதஉரிமைகள் மோசமாக மீறப்படுவதாக நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றங்கள், மீறல்களையும் அவற்றுக்குப் பொறுப்பானவர்களையும் கையாள்வதற்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை முறைமை ஒன்றை வடிவமைத்து வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Post a Comment