சிங்கள பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியலாம் - நீதிமன்றம் தீர்ப்பு
சிங்கள பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தமது கல்விச்செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
ருவான்வெல்ல பிரதேசத்தில் சிங்கள பாடசாலையொன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை குறித்த பாடசாலையின் அதிபர் தடை செய்துள்ள நிலையில் அது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் இறுதியிலேயே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சிங்களப் பாடசாலையில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிய அப் பாடசாலையின் அதிபரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரது பெற்றோர் உயர் நீதிமன்றில் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கின் மீதான தீர்ப்பின் போதே சிங்கள பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய முடியுமென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Alhamdulillah....
ReplyDeleteIts beginning.....
Allah will give us everything success once be patience and dua............
ALHAMDULILLAH
ReplyDeleteAlhamdulilla Allahu Akbar
ReplyDeleteAl-Hamdu lillah. Unmai Viliththuk kondazu.
ReplyDeleteCan please try to provide the details of the case that will help the people who is also undergoing in the scenario..
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்
ReplyDelete