Header Ads



பன்றியை இறைவனின் பெயரால் அறுத்தால் ஹலாலாகுமா? சிங்கள சகோதரர் கேள்வி


(Mohamed Mohideen Najeem)

இப்போது எமது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நிலைமையை நோக்கும் போது எனக்கு எட்டு அல்லது ஒன்பது வருடங்களுக்கு முன்பு நடந்தது சில சம்பவங்கள் ஞாபகம் வருகிறது.

அப்போது  ஒரு தனியார் தொழில் நிறுவனத்தில்  நான் மட்டுமே முஸ்லிமாக சக  மாற்று மதத்தவர்களிடம்  வேலை செய்து கொண்டிருந்த போது அவ்வப்போது சில  வாதங்களும் இடம் பெறும்.

அப்போது  முஸ்லிம்கள் மாடு அறுப்பதைப்பற்றி நிறையவே  என்னிடம் கேட்பதுண்டு. ஒரு நண்பண் கேட்டான் "ஹலால் என்றால் மாட்டை அறுத்து திண்ணையில் இரத்தத்தை ஓட விட வேண்டுமல்லவா" என்றான். பின்னர் நான் அவர்களுக்கு ஹாலால் என்றால் என்னவென்று விளக்கம் கொடுத்தேன். அப்போ இடையில் ஒரு நண்பன் "அப்ப பன்றியின் கழுத்தை இறைவன் பெயர் கொண்டு அறுத்தால் ஹலாலா? "என கேட்டான். அப்போ நான் பன்றி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என்றும் மற்றும் பைபிளிளும் பன்றி இறைச்சி  தடை செய்யப்பட்டிருக்கு"என்றேன். அப்போ அங்கே இருந்த கிறுஸ்தவ நண்பனை நீ ஏன்டா பன்றி சாப்பிடுகிறாய் என்று கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

இன்னொரு நாள் நான் எனது மதிய உணவை எடுத்துக்கொண்டு சாப்பிட ஒதுக்கப்பட்ட  அறைக்கு சென்று அங்கே போடப்பட்ட மேசையில் சக நண்பர்களுடன் உட்கார்ந்தேன். நாங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் கேட்டும் கொடுத்தும் சாப்பிடுவது வழக்கம். அன்று எனது வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவுப்பெட்டியில் மாட்டிறைச்சியும் மரக்கறியும் இருந்தன. இதைக் கண்ட நண்பன் "நீங்க ஏன் மாடு வெட்டுறீங்க "என்று கேட்டான்.அதற்கு நான் "வேறதுக்கு சாப்பிடத்தான்" என்று சற்று நகைச்சுவையாக சொன்னேன்.

அதற்கு அவன் கொஞ்சம் சீரியசாக அது ஒரு உயிர் அதை கொல்லுவது பாவம் மற்றும் கர்மம் என்று சொன்னான்.அப்போது நான் பக்கத்தில் இருந்த   இன்னொரு நண்பனின் உணவுப்பெட்டியைக்காட்டி  நீங்க ஆயிரக்கணக்கான"ஹால் மெஸ்ஸூ"கொல்லலாமா"?என்று கேட்டேன். அதற்கு மற்றவர்கள் சிரிக்க  "நாங்கள் கொல்ல மாட்டோம் ஆனா  சாப்பிடுவோம்"என்றான்.

அதற்கு நான் கொல்லாமல் எப்படி சாப்பிடுவது என்று கேட்க, அதற்கு அவன் யாரோ ஒருத்தர் கொன்றால் அதை நாங்கள் சாப்பிடுவோம் என்றான். அதற்கு நான்  நீங்க ஒரு கொள்கையை வைத்துக்கொள்ளுங்கள் என்றேன். அதற்கு  இன்னொருன்  நீங்க என்ன   காரணம் சொன்னாலும் மாடு வெட்டுவது மகா குற்றம் என்றான். அப்போது நான் மனிதனை   கொல்வதுதான் மிகப்பெரிய பாவம் என்றேன். அந்த குழுவில் ஒரு வெஜிடேரியன் நண்பன் நான் ஒரு நாளும் ஒரு சிறு ஜந்துக்களையோ கொன்றதில்லை என்றும்   மாமிசம் உண்பதில்லை என்றும் சொன்னான். அதற்கு நான் நீங்கள் உண்ணும் மரக்கறி மற்றும்  தண்ணீரில் எவ்வளவு கண்ணுக்கு தெரியாத   உயிரினம் உள்ளது தெரியுமா மேலும் நீங்க உங்களுக்கு கடிக்கும் நுளம்பைக் கூடவா அடிப்பதில்லை என்று கேட்க அவன் நுளம்பு கடிக்கும் போது விரலால் தட்டி  அதை விரட்டுவேன் என்றும் தெரியாமல் செய்வது கொலை ஆகாது. 

கொலை ஒன்றை செய்ய 1,மனம் எண்ண வேண்டும் 2.திட்டமிட வேண்டும் 3,கொலையை செயல் படுத்த வேண்டும்  அப்போதுதான் அது உயிர் கொலையாக  கருதப்படும் என்ற அவர்களது கோட்பாட்டை எனக்கு சொல்ல உடனே நான்  நீங்கள் வேளாண்மை  வயல் செய்கின்றீர்கள்  அப்போ பூச்சி மற்றும் புழுக்கள் உங்கள் பயிரை நாசம் செய்யும் போது என்ன  விரலால் நுளம்பை தட்டி விரட்டுவது போல்  விரட்டுவீர்களா அல்லது எண்ணெய் தெளித்து கொல்வீர்களா? அப்போ அந்த கொலைக்கான செயற்பாடுளான  மனதில்  நினைத்தல்,திட்டமிடல்,செயல் படுத்துதல் மூண்றும் இடம் பெறுகிறதே என்று  சொல்ல  அந்த  வெஜிடேரியன் நண்பன் அதன் பின்பு ஒன்றும்  சொல்லவில்லை.

சாப்பாட்டை முடித்து விட்டு நகர்ந்தான். அப்போ ஆடு, மாடுஅனைத்தையும் சாப்பிடும் சக நண்பர்கள்  உங்கள் இறைவன்   நியாயமமான    நடை முறைக்கு ஒத்துப்போகக்கூடியவற்றை சொல்லி இருக்கிறான் என்றனர்.

இப்போது ஒரு வாறாக ஹலால் பிரச்சினை குறை அடுத்ததாக முஸ்லீம்கள் அறுப்பது சாப்பிடுவதில்தான்  முட்டுக்கட்டை ஏற்படுத்த உள்ளார்கள்.

முறையாக சொல்லி விளங்க வைத்தால்  அவர்கள் விளங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள சிறந்த மாற்று மத சகோதரர்கள் இன்னும்  இருக்கிறார்கள். மேலும்  குர்ஆன் உண்மையான ஹதிஸ் மட்டுமில்லாமல் மற்ற மதங்கள் பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது.எம் இறைவன் இப்போது நாட்டில் எழுந்துள்ள  முஸ்லீம்களுக்கெதிரான அசாதாரன நிலைமையை லேசாக்கித்தருவானாக ஆமீன்.

3 comments:

  1. vilankatevarkalilum vitandavatam pasupevarkal payankaremanevarkal,Averkalatu vinakalukku muraiyanetum,thelivanetumane sariyane vilakkam.sintikkumaarelai maylum maylum vlarppanahe.

    ReplyDelete
  2. We can't explain to uneducated and the group who are not willing to listen.

    ReplyDelete
  3. Scients have found out that even plants have a life, not only Animals..So killing of plants is not acceptable at all!!!Plants are living creatures that benefit humans by providing oxygen and a source of food. In order for any plant to live, it needs a few basic things, otherwise it cannot grow..so we, human beings should not eat plants or animals at all!!! LoL

    ReplyDelete

Powered by Blogger.