இலங்கையிலிருந்து ஜெனீவா செல்லும் அரசாங்க குழுவில் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லை
எதிர்வரும்வரும் திங்களன்று சுவிஸ் ஜெனீவா நகரில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடருக்கு அமைச்சர் மகிந்த சமரசிங்கவே தலைமை தாங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த சமரசிங்க மட்டுமே ஜெனிவா கூட்டத்தில் இலங்கை குழுவில் இடம்பெறவுள்ள ஒரே அமைச்சராவார். ஏனையோர் அதிகாரிகள் நிலையில் உள்ளவர்களாவர். கடந்தமுறை முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும், முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் ஜெனீவா சென்றிருந்தனர்.
மகிந்த ராஜபக்சவே, தம்மை ஜெனிவா செல்லும் குழுவுக்குத் தலைமை தாங்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு தான் இணங்கியுள்ளதாகவும் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனிவா கூட்டத்தை எதிர்கொள்வது குறித்து நேற்று மகிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டமொன்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தை அடுத்தே, மகிந்த சமரசிங்கவை ஜெனிவாவுக்கு அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொறுத்திருந்து தான் பார்ப்போம்.. ஜனாதிபதி முடிவெடுத்து விட்டார் போலும் பப்ஸ் பாணியில்..என்னதான் இருந்தாலும் வயசாகிட்டுதில்ல. அது தான் ஞாபகச் சருக்கல்.. நாங்கள் எப்பொழுதும் தாய் நாட்டுக்காக இருக்கிறோம். காட்டிக் கொடுக்கும் பணியை எப்பொழுதும் இச்சமூகம் இந்நாட்டில் செய்ததில்லை. அன்றைய கண்டி சாம்ப்ராஜ்யத்தில் வீழ்ச்சி முதல் தற்போதைய இன மோதலுக்கான தூண்டுதல் (ஜெனிவா பிரச்சினை நேரத்தில்) வரை அவர்களே அதிகமாக நாட்டை மேற்கத்தயருக்கு ஈடு வைக்கிறார்கள். அவர்கள் கணக்கில் காசும், ஆட்சியும் வந்தால் போதும். நாடு, மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை..
ReplyDeleteஇலங்கையில் தனி நபர், பத்திரிகை சுதந்திரம், சிறு பான்மை மக்களின் இருப்பு... போன்ற இன்னொர்றென்ன மனித உரிமை மீறல்கள் இந்த அரசாங்கத்தினாலும் ராஜபக்க்ஷ அன் கம்பநியினாலும் அப்பட்டமாக மீறப்படுகிறது. எனவே நிட்சியமாக இந்த அரசாங்கத்தின் முகத்திரை கிழித்தெறியப்பட்டு, உண்மை முகம் இந்த உலகுக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும். இந்த துவேசம் பிடித்த அரசாங்கத்துக்கு எவருமே வக்காலத்து வாங்கக் கூடாது.
ReplyDelete