Header Ads



பசீர் சேகுதாவூத்திற்கு எதிராக ஒழுக்காற்று - அம்பாரை மத்திய குழுக்கூட்டத்தில் ஆராய்வு


(எஸ்.அன்சப் இலாஹி)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அமைச்சுப்பொறுப்பை பெற்றுள்ளமை தொடர்பாக அரசியல் அதிஉயர் பீடத்திற்கு கொண்டு சென்று ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது பற்றி ஆராயப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாரை மாவட்ட மத்திய குழுக்கூட்டத்தில் இதுபற்றி ஆராயப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாரை மாவட்ட மத்திய குழுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு (05.02.2013) நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அம்பாரை மாவட்டத்தில் உள்ள மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அமைச்சுப் பொறுப்பை பெற்றுள்ளமை தொடர்பாக மிகவும் காரசாரமான முறையில் விவாதம் இடம்பெற்றது. அங்கு உறுப்பினர்களும் தெரிவிக்கையில்,,

கட்சியின் கட்டமைப்பை உடைத்துக்கொண்டு அமைச்சுப்பொறுப்பை பெற்றுக்கொண்டமை தவறன சுட்டிக்காட்டப்பட்டதுடன். இறுதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் அதிஉயர் பீடத்திற்கு இவ்விடயத்தை கொண்டுசென்று ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்தும் கட்சியின் தலைவர் முன்னிலையில் ஆராயப்பட்டது.

இக்கூட்டம் இரவு 7.40 க்கு ஆரம்பித்து இரவு 10.30வரை இடம்பெற்றது. இக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நீதி அமைச்சருமான ரஊப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசனலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் என பலபேர் கலந்து கொண்டனர்.



2 comments:

  1. தலைவர் அவர்கள் இந்த கூட்டதிலும் கண்டித்து வாள்தினாரா?

    ReplyDelete
  2. முதுகு எலும்பற்ற தலைவரை வைத்துக் கொண்டு வசீர் சேகுதாவுத்துக்கு எதிராக எந்த ஒழுங்காற்று நடவடிக்கையும் எடுக்க முடியாது... முடிந்தால் இருவருக்கும் எதிராக எடுங்கள்.. அப்படி முடியாவிட்டால்... இருவரையும் அம்பாறை மாவட்டத்தில் கால்வைக்க முடியாமல் துரத்துங்கள்.. அப்பத்தான் ஞானம் வெளுக்கும் நீதி பிறக்கும்...

    ReplyDelete

Powered by Blogger.