Header Ads



பள்ளிவாசல்கள் தாக்குதலை முஸ்லிம் அமைச்சர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்


பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்களை பகிரங்கமாகக் கூறினால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமென்பதால் அவற்றை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா இல்லையா என்பதனை தம்முன் உள்ள முஸ்லிம் அமைச்சர்களிடமும் அரசு கேட்டுத் தெரிந்து கொள்ள முடியுமென்றும் கூறினார். 

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை நிலையியல் கட்டளை 23: 2 இன் கீழ்  விசேட  கூற்றொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;

நாட்டில் இடம்பெறும் இனவாத, மதவாத சம்பவங்கள் தொடர்பில்  கடந்த 6  ஆம் திகதி  இச் சபையில் நான் கேள்வி எழுப்பியபோது அப்படியான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என  புத்தசாசன மற்றும் மத விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன  மறுத்திருந்தார். 

எனினும், எமது கேள்விக்கு மறுநாள் சபை முதல்வரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்தபோது   எனது  கேள்விகள் மிகைப்படுத்தப்பட்டதெனக் கூறினார். அத்துடன், தாக்குதல்களுக்குள்ளான பள்ளிவாசல்கள் தொடர்பான விடயங்களை சாட்சியங்கள், விபரங்களுடன் நிரூபிக்க முடியுமா எனவும்   சவால்விட்டார். அத்துடன், அப்படி எந்த வொரு தாக்குதல் சம்பவங்களும்  இடம்பெறவில்லையென பொலிஸ் மா  அதிபர் அறிக்கை சமர்ப்பித்திருப்பதாகவும் கூறினார்.

3 comments:

  1. மிக்க நன்றி திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களே...!

    முஸ்லிம் அமைச்சர்களே....! இந்த ராஜபக்க அன் கம்பனி உங்களையும் இந்த முஸ்லிம் உம்மாவையும் அவமானப்படுத்தியது போதும்... உங்களது சுக போக வாழ்க்கைக்காக இந்த கண்ணியமான இஸ்லாத்தையும் அதை பின்பற்றும் முஸ்லிம்களின் தன்மானத்தையும் கெளரவத்தையும் விற்று விடாதீர்கள். அவருக்கும் அவரது கம்பனிக்கும் உங்களது பலமான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  2. BEST .THIS IS CORRECT.ALL MUSLIMS MINISTER DONT SELL THE MUSLIMS

    ReplyDelete

Powered by Blogger.